கோவையில் 10 ஆண்டுகால சேவை நிறைவு: விஐபி-க்களின் மெய்க்காப்பாளராக இருந்த மோப்பநாய் 'அல்கா' உயிரிழப்பு; துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை!

(காவல்துறை அதிகாரிகள் மற்றும் மோப்பநாய் பிரிவு அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய படம்)
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட மோப்பநாய் பிரிவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறப்பாக பணியாற்றி வந்த அல்கா என்ற பெண் மோப்பநாய், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தனது 13-வது வயதில் இன்று உயிரிழந்தது. இந்த மோப்பநாய் சாதாரண காவல் பணிகளைத் தாண்டி, நாட்டின் மிக உயரிய பதவியில் உள்ளவர்களான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர்கள் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்ற முக்கியப் பாதுகாப்புப் பணிகளில் முன்னணி நாயாகச் செயல்பட்டு முத்திரை பதித்தது குறிப்பிடத்தக்கது.
அல்தாவின் ஈடு இணையற்ற சேவையை கௌரவிக்கும் விதமாக, காவல்துறை சார்பில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்த உருக்கமான மரியாதை நிகழ்வில், சூலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான காவலர்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நீண்ட காலம் காவல்துறையின் ஒரு அங்கமாக இருந்து பாதுகாப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அல்தாவின் மறைவு கோவை காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்