சுதந்திர தின நன்னாளில் மதுக்கரையில் கோலாகலமாக நடந்த "போதை இல்லா தமிழ்நாடு" விழிப்புணர்வு இயக்கம்!



நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்கால சந்ததியினரின் நலனைக் காக்கும் பொருட்டு கோவையில் "போதை இல்லா தமிழ்நாடு" என்ற லட்சியத்தை நோக்கமாகக் கொண்டு பெற்றோர்களை ஒருங்கிணைக்கும் விழிப்புணர்வு இயக்கம் இன்று காலை மதுக்கரையில் நடைபெற்றது. "என்றும் உண்மை வெற்றி, உணவை வீணாக்காதீர்" அமைப்பின் நிறுவனர் மற்றும் புகைப்படக் கலைஞர் M. ஜான் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாகச் செய்தார். போதைப் பொருள் இல்லாத ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவும், பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் போதைக்கு எதிரான விழிப்புணர்வை வீட்டிலிருந்தே தொடங்குமாறு பெற்றோர்களுக்கு இந்நிகழ்ச்சியில் வலுவான அழைப்பு விடுக்கப்பட்டது.
கோவை, மதுக்கரை குவாரி ஆபீஸ் பஸ் ஸ்டாப் அருகில் இன்று காலை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் கலந்துகொண்டு போதைக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். "போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவது நம் அனைவரின் கனவு மற்றும் கடமை" என்ற எழுச்சி முழக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக முன்னெடுத்து நடத்திய அனைவருக்கும் மாணவ-மாணவியர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

தீத்திபாளையம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

கோவையில் இன்று தீத்திபாளையம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து 80 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்து மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மிகச் சிறப்பாக கொண்டாடினர், மேலும் தீத்திபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தீத்திபாளையம் ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!





ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுச் சேவைப் பிரிவின் தேசியத்தலைவர் திரு.நாராயணன் ராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, மாணவிகள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய திறன்களைத் தொடர்ந்து கற்றுக்கொண்டு, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த சாதனைகளை படைக்க வேண்டும் என்று கூறினார்.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் திரு.சுந்தர் ராமகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும்போது, கல்வி என்பது நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் பயன் தருவது தொடர் உழைப்பின் பலனாகப் பட்டம் பெறும் மாணவிகள், தங்களுடைய திறமைகளைத் தனக்கும் தான் வாழும் சமூகத்திற்கும் உதவக்கூடியதாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், மாணவிகளின் வாழ்க்கையில் வெற்றிகளையும் பலவித முன்னேற்றங்களையும் பெற வாழ்த்தினார்.
முதல்வர் முனைவர் கி.சித்ரா அவர்கள் கல்லூரி மற்றும் மாணவிகளின் சாதனைகளையும் பல்கலைக்கழக அளவில் அவர்கள் பெற்ற சிறப்புகளையும் குறிப்பிட்டுப் பட்டம் பெற்ற அனைவரையும் பாராட்டிப் பேசினார். 4 தங்கப்பதக்கங்கள் உட்பட பல்கலைக்கழக அளவில் 12 சிறப்பிடங்களைக் கல்லூரி மாணவிகள் பெற்றுள்ளதோடு, இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 634 பேர் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலரும் கல்லூரியின் செயலருமான திரு.சி.வி.ராம்குமார் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு,டி.மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி!!





உடுமலைப்பேட்டை அரசு பள்ளி ஓவியர் ஆசிரியர் மதன்குமார், காந்திமுத்து சாமிநாதன், திருகுமரன் ஆகியோர் இணைந்து மாற்றுத்திறன் கொண்ட 50 நபர்களுக்கு இன்று அரிசி மற்றும் மதிய உணவு வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தராபுரம் மணிகண்டன், சாந்தி, தினகரன்சாமுவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் வருகை தந்த ஆசிரியர் மதன்குமார் அவர்களுக்கு 
'உண்மை வெற்றி 
உணவை வீணாக்காதீர்கள்' அமைப்பின் நிறுவனர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஜான்  
மதன்குமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். காந்திமுத்து அவர்களுக்கு மணிகண்டன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு நலத்திட்டங்களைப் பெற்றுக்கொண்டு தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில்இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் ( CISCE) மண்டல தடகளப் போட்டிகள்: கோவை நேரு மைதானத்தில் கோலாகல தொடக்கம்



கோவை ஸ்டேன்ஸ் பள்ளி' (Stanes ICSE/ISC School) சார்பில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கின.
நடைபெறவுள்ள இப்போட்டிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த ஏ, பி, சி மற்றும் டி (Zones A, B, C & D) ஆகிய மண்டலங்களிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். நிகழ்ச்சியில்
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய டாக்டர் ஜெயக்குமார் ஸ்டானியட், நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் சுசீதா ராமச்சந்திரன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
மேலும், ஸ்டேன்ஸ் ICSE பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயபிரகாஷ், ஸ்டேன்ஸ் ஏஜ மேல்நிலைப் பள்ளி முதல்வர் P.A. ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் CBSE பள்ளி முதல்வர் எலின் ஜெத்ரோ மற்றும் ஸ்டேன்ஸ் சர்வதேசப் பள்ளி முதல்வர் ஜார்ஜினா சிம்மன்ஸ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, மண்டல அளவில் சாதனைகள் படைக்க இப்போட்டி ஒரு சிறந்த தளமாக அமையும். ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இத்தடகளப் போட்டிகள் நாளை மாலை நிறைவடைகின்றன.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்


ஆர்.எஸ்.அஞ்சனா குரூப்ஸ் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து கோயம்புத்தூர், குளத்து பாளையம், கோகுலம் காலனி, சாஷா ஸ்கூல் ஆப் லைப் என்ற இடத்தில் பொதுமக்களுக்கான இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாமை நடத்தியது.இந்த முகாம் காலை முதல் மதியம் வரை நடைபெற்றது.இந்த முகாமினை ஆர்.எஸ்.அஞ்சனா குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் M. ராஜேஷ் குமார் மற்றும் கோவை N. குருசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சாஷா ஸ்கூல் ஆப் லைஃப் (SASHA School for Life) பள்ளியின் செயலாளர் திரு. சசிகுமார் சாம்ராஜ் (Mr. Sasikumar Samraj), தாளாளர் திருமதி. ஹேமலதா சசிகுமார் (Mrs. Hemalata Sashikumar) மற்றும் முதல்வர் திருமதி. பவித்ரா (Mrs. Pavithra) ஆகியோர் 
உணவை வீணாக்காதீர்கள்' அமைப்பின் நிறுவனர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஜான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், கண் புரை உள்ளவர்களுக்கு கோவை தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் தொண்டு நிறுவனமான ராஜலக்ஷ்மி நேத்ராலாயாவில் இலவசமாக IOL லென்ஸுடன் கூடிய கண் புரை அறுவை சிகிச்சை வழங்கப்படவுள்ளதுடன், உணவு, மருந்து மற்றும் தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும்.
மேலும், அறுவை சிகிச்சை செய்ய விரும்புபவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தவறாமல் கொண்டுவரம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, விட்ரக்டோமி அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான கண் அறுவை சிகிச்சை, விழித்திரை விலகல் அறுவை சிகிச்சை மற்றும் விழித்திரை நோய்க்கான அறுவை சிகிச்சை போன்ற கண் சிகிச்சைகளும் தகுதியுடையவர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

கே.பி.ஆர். கல்லூரியில் ‘அப்யுதயா ’26’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி தொடக்கம்!

கோவை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் பிசினஸ் ஸ்கூல் சார்பில், முதலாம் ஆண்டு MBA மாணவர்களுக்கான ‘அப்யுதயா ’26’ அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பேசிய கல்லூரிச் செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் தனித்திறன் மற்றும் மனிதநேயப் பண்புகளே மிக முக்கியம் என்று வலியுறுத்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் அகிலா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கே.டி. சீனிவாச ராஜா, பேராசிரியர் வி. பழனிமுத்து ஆகியோர், மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என அறிவுறுத்தினர். வரும் நாட்களில் துறை வல்லுநர்களின் வழிகாட்டுதல் அமர்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான ‘அப்யுதயா ’26’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி தொடக்கம்.



கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கே.பி.ஆர். பிசினஸ் ஸ்கூல் சார்பில், முதலாம் ஆண்டு முதுநிலை வணிக நிர்வாக (எம்.பி.ஏ.) மாணவர்களுக்கான ‘அப்யுதயா ’26’ அறிமுகம் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில் மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சிக்கு கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தலைமை வகித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், “செயற்கை நுண்ணறிவு இன்று அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களை எளிதாகவும் விரைவாகவும் பெறும் வசதியை அது உருவாக்கியுள்ளது. எனவே, மாணவர்கள் செயற்கை நுண்ணறிவுடன் போட்டியிடுவதற்குப் பதிலாக, அதனால் செய்ய முடியாத தனித்திறன்கள், சிந்தனைத் திறன் மற்றும் மனிதநேயப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒழுக்கம் என்பது செயற்கை நுண்ணறிவால் வழங்க முடியாத முக்கியமான மனிதப் பண்பாகும்,” என்றார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் அகிலா முத்துராமலிங்கம் பேசுகையில், கே.பி.ஆர். மில் நிறுவனத்தின் ரூ.42 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சியை மாணவர்கள் சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். முதுநிலை மாணவர்களுக்கான ‘ஸ்ட்ரைடு’ திட்டம், திறன் மேம்பாடு மற்றும் சிறந்த வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து துறைத் தலைவர்களை அறிமுகப்படுத்தினார்.துவக்க நாளில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குநர் கே.டி. சீனிவாச ராஜா, நேர மேலாண்மை, மன உறுதி, இலக்கு நிர்ணயம், மதிப்புக் கூட்டுதல் மற்றும் தொழில்முனைவோர் சிந்தனையின் அவசியம் குறித்து பேசினார். மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும் வளர வேண்டும் என அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் பேராசிரியர் வி. பழனிமுத்து, ‘புதுமை தவிர்க்க முடியாதது’ என்ற தலைப்பில் பேசினார். மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சி, நல்ல அணுகுமுறை, தனிநபர் உறவுத்திறன், ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் இன்குபேஷன் வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும், மாணவர்களின் கல்விப் பயணம், மேலாண்மைத் திறன் வளர்ச்சி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டன.
தொடர்ந்து அடுத்த நான்கு நாட்களிலும், தொழில் மற்றும் மேலாண்மைத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தனிநபர் பிராண்டிங், பிராண்ட் மேலாண்மை, நிதி நிலைத்தன்மை, தொழில்முனைவோர் சிந்தனை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

ஜெகன்நாத் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பிராப்பர்ட்டீஸ் சார்பில் மஹா ருத்ராபிஷேக பூஜை


ஆன்மீக உணர்வை மேம்படுத்தவும், பக்தி மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும், ஜெகன்நாத் டெக்ஸ்டைல்ஸ் & பிராப்பர்ட்டீஸ் வழங்கும், பரமசிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப் புனிதமான வேத யாகங்களில் ஒன்றான மகா ருத்ர அபிஷேக விழா மற்றும் ஒரு லட்சம் ருத்ர பாராயணம் கோயம்புத்தூர், ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் அமைந்துள்ள ராஜஸ்தானி சங்க வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த மாபெரும் ஆன்மீக நிகழ்ச்சி 20-ம் வருடமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் மூலம் உலக அமைதி, வளமான வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் அனைவரின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று உள்ளனர்.இந்நிகழ்ச்சி, மதியம் 12.00 மணி முதல் பக்தர்கள் தாங்களே கலந்து கொண்டு அபிஷேகம் செய்யும் நிகழ்வுடன் தொடக்கியது. தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு மகா ருத்ர அபிஷேகம், மாலை 6.30 மணிக்கு மகா அலங்காரம், பின்னர் மாலை 7.00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
மகா ருத்ராபிஷேக விழாவில், சிவபெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.1008 லிட்டர் பசும்பால், 1008 தாமரைப் பூக்கள், 306 லிட்டர் தயிர், 108 இளநீர், 108 லிட்டர் கரும்புச் சாறு, 108 லிட்டர் பஞ்சாமிர்தம், 108 லிட்டர் பன்னீர், 108 லிட்டர் திருமஞ்சனம், 108 லிட்டர் சந்தனம், 108 லிட்டர் பழரசம், 108 கிலோ விபூதி, 18 கிலோ கரும்புச் சர்க்கரை, 18 கிலோ அரிசி மாவு, 18 லிட்டர் தேன் மற்றும் 18 லிட்டர் நெய் உள்ளிட்ட புனித திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும், மற்றும் அனைத்து இந்து நதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட புனித நீர்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.
மகா ருத்ர அபிஷேகம் என்பது வேத மரபில் மிகவும் சக்தி வாய்ந்த சிவ வழிபாடாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ ருத்ரம் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க நடைபெறும் இந்த அபிஷேகம், பக்தர்களின் வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி, மன அமைதி, ஆரோக்கியம், ஆன்மீக முன்னேற்றம் மற்றும் இறையருளைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். இந்நிகழ்வின் மூலம் இளம் தலைமுறையினரிடையே ஆன்மீக பாரம்பரியத்தை வளர்த்தெடுப்பதோடு, இந்தியாவின் தொன்மையான வேத கலாச்சாரத்தையும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே முக்கிய நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெகன்நாத் டெக்ஸ்டைல்ஸ் & பிராப்பர்ட்டீஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், இந்த புனித நிகழ்வை இணைந்து நடத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருக்கும் வேத விற்பன்னர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவளித்து வரும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வழிபட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனஎன்றனர்.இந்த ஆன்மீக விழாவில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு இறைவன் சிவபெருமான் மற்றும் அன்னை பார்வதி தேவியின் அருளைப் பெற்று அனைத்து பக்தர்களையும் ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அனுசரித்தனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

கோவையில் தமிழக ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026

இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடுவதைவிட, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026

 கோவையில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு ஆர்ய வைசிய மகாசபை சார்பில் நீலம்பூர் பிஎஸ்ஜி மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். ஒரு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் 12 மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 30-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். நான்கு அறிவுசார் அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளுக்கான கண்காட்சியும் இடம்பெறுகிறது.
தொழில்முனைவு, தொழில்நுட்பம், உற்பத்தித் துறை, நிதி, தலைமைத்துவம், புத்தாக்கம், அறிவியல், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் பயிலரங்குகள் நடைபெற உள்ளன.
120 நாள் பயணத்தில் உருவான மாநாடு
மாநாட்டுக்கான கருத்து 120 நாள் விழிப்புணர்வுப் பயணத்தின் மூலம் உருவானதாக திட்டத் தலைவர் சுரபி கார்த்திக் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின்போது 40-க்கும் மேற்பட்ட நகரங்கள், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று 4,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை நேரடியாகச் சந்தித்ததாக அவர் கூறினார்.இதுகுறித்து சுரபி கார்த்திக் மேலும் கூறியதாவது:
இளைஞர்களிடம் திறமை, கல்வி மற்றும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தபோதிலும், வழக்கமான வேலைவாய்ப்புகளுக்கு அப்பால் உள்ள வாய்ப்புகள் குறித்து பலர் அறிந்திருக்கவில்லை. வேலைவாய்ப்புகளைத் தேடுவதிலிருந்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மனநிலைக்கு இளைஞர்களை அழைத்துச் செல்வதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றார்.
“பாருங்கள் - நம்புங்கள் - உருவாக்குங்கள்”
“பாருங்கள் - நம்புங்கள் - உருவாக்குங்கள்” என்ற மூன்று அடிப்படை நோக்கங்களின் அடிப்படையில் மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.பாருங்கள்: சாதனை படைத்த தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் முன்னேறியவர்களிடம் இருந்து சாத்தியக்கூறுகளை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.நம்புங்கள்: இளைஞர்களின் தலைமுறைக்கு நெருக்கமான தொழில்முனைவோர், வல்லுநர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோருடன் கலந்துரையாடும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.உருவாக்குங்கள்: செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், தொழில், உற்பத்தி, நிதி மற்றும் தொழில் நிறுவனங்களை உருவாக்குதல் உள்ளிட்ட துறைகளில் நடைமுறைப் பயிற்சி மற்றும் சிறப்புப் பயிலரங்குகள் நடைபெற உள்ளன.
வர்த்தகக் கண்காட்சி
மாநாட்டையொட்டி பெரிய அளவிலான வர்த்தகக் கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் தொழில் வாய்ப்புகள், தொழில் தீர்வுகள், சமூக முன்னெடுப்புகள், எதிர்காலத் தொழில்கள் மற்றும் அரசு சார்ந்த சேவைகள் மற்றும் ஆலோசனைகள் இடம்பெறுகின்றன.
இளம் தொழில்முனைவோர் மற்றும் தொழில் தொடங்க விரும்புவோருக்காக “வைசியா ஷார்க் டேங்க்” நிகழ்ச்சியும் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.
நம்பிக்கைக்குரிய தொழில் யோசனைகள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ.50 கோடிக்கும் அதிகமான நிதித் தொகுப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் யோசனைகள், வழிகாட்டுதல், தொழில் தொடர்புகள் மற்றும் மூலதனம் ஆகியவற்றை ஒரே தளத்தில் இணைப்பதே இதன் நோக்கமாகும்.
“விட்டோ” சூப்பர் ஆப் அறிமுகம்
உலகம் முழுவதும் உள்ள ஆர்ய வைசிய சமூகத்தினரை ஒருங்கிணைக்கும் வகையில் விட்டோ (VITO) / வைசியா சூப்பர் ஆப் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தொழில்முனைவோர், வல்லுநர்கள், மாணவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் குடும்பங்களை இணைத்து, அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, இணைந்து செயல்பட்டு, முதலீடு செய்து, தொழிலை வளர்த்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த டிஜிட்டல் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.“விஷன் 2047” என்ற நீண்டகால நோக்கத்தின் கீழ் உலகளவில் ஒருங்கிணைந்த ஆர்ய வைசிய சமூக வலையமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
வைசியா வேலைவாய்ப்பு, வைசியா கற்றல், வைசியா நிதி, வைசியா வர்த்தகம், வைசியா இணைப்பு, வைசியா சுகாதாரம், வைசியா பாரம்பரியம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் இந்தச் செயலியில் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. தலைமுறைகளை இணைக்கும் நிகழ்ச்சி தொழில் நிறுவனங்கள், அவற்றின் மதிப்புகள் மற்றும் அனுபவங்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது குறித்தும் மாநாட்டில் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெறுகிறது.
இதில் ஏற்கெனவே தொழிலில் சாதனை படைத்த குடும்பங்களைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் பங்கேற்று தங்களது தொழில் பயணம் மற்றும் தலைமுறை மாற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.பல்வேறு துறைகள் குறித்து கலந்துரையாடல்
தொழில், தலைமைத்துவம், பண மேலாண்மை, தேசியப் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மனநலம் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்புரைகள் மற்றும் குழு கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.டாக்டர் ஏ. கலியமூர்த்தி, ஐபிஎஸ், ஜி.ஆர். ராதாகிருஷ்ணன், ஜிஆர்டி குழும நிர்வாக இயக்குநர், ஜி.ஆர். அனந்தபத்மநாபன், ஜிஆர்டி குழும நிர்வாக இயக்குநர், ஓய்வுபெற்ற மேஜர் மதன் குமார், மதுரை வீரன் மாரிமுத்து, குரு மித்ரேஷிவா, கே. அண்ணாமலை உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.மொத்தம் 30-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பல்வேறு அமர்வுகளில் உரையாற்ற உள்ளனர்.
ஆர்ய வைசிய சிறப்பு விருதுகள்
கல்வி, தொழில்முனைவு, தொழில்நுட்பம், வேளாண்மை, சமூகப் பங்களிப்பு, விளையாட்டு, கலை, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் ஆர்ய வைசிய சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன.பெண்கள், இளைஞர்கள், தொழில் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.அனைவருக்கும் வாய்ப்பு பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மாநாட்டில் பங்கேற்பு, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரப் பின்னணி காரணமாக அறிவு, தொடர்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதே இதன் நோக்கமாகும்.
சிறு நகரம் அல்லது கிராமத்தைச் சேர்ந்த இளைஞரும் பெருநகரத்தைச் சேர்ந்த இளைஞருக்கு இணையான அறிவு, தொடர்புகள் மற்றும் வாய்ப்புகளைப் பெறும் சூழலை உருவாக்குவதே மாநாட்டின் நீண்டகால நோக்கமாகும்.
ஒருநாள் நடைபெறும் மாநாட்டின் மூலம் இந்த முயற்சி முடிவடையவில்லை என்றும், இது நீண்டகாலப் பயணத்தின் தொடக்கம் என்றும் சுரபி கார்த்திக் தெரிவித்துள்ளார்.
வலிமையான, ஒருங்கிணைந்த மற்றும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளத் தயாரான ஆர்ய வைசிய சமூகத்தை உருவாக்கும் நோக்கில் “விஷன் 2047” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம், சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் குடும்பங்களை ஒரே தளத்தில் இணைத்து, அடுத்த தலைமுறைக்கான அறிவு, தொழில் வாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் மூலதனத்தை ஒருங்கிணைப்பதாகும்.கோவை நீலம்பூர் பிஎஸ்ஜி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது
“ஒன்றிணைந்து சிந்திப்போம்; ஒன்றிணைந்து வளர்வோம்; ஒன்றிணைந்து உருவாக்குவோம்” என்ற முழக்கத்துடன் மாநாடு நடைபெறுகிறது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்