இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்
ஆர்.எஸ்.அஞ்சனா குரூப்ஸ் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து கோயம்புத்தூர், குளத்து பாளையம், கோகுலம் காலனி, சாஷா ஸ்கூல் ஆப் லைப் என்ற இடத்தில் பொதுமக்களுக்கான இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாமை நடத்தியது.இந்த முகாம் காலை முதல் மதியம் வரை நடைபெற்றது.இந்த முகாமினை ஆர்.எஸ்.அஞ்சனா குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் M. ராஜேஷ் குமார் மற்றும் கோவை N. குருசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சாஷா ஸ்கூல் ஆப் லைஃப் (SASHA School for Life) பள்ளியின் செயலாளர் திரு. சசிகுமார் சாம்ராஜ் (Mr. Sasikumar Samraj), தாளாளர் திருமதி. ஹேமலதா சசிகுமார் (Mrs. Hemalata Sashikumar) மற்றும் முதல்வர் திருமதி. பவித்ரா (Mrs. Pavithra) ஆகியோர்
உணவை வீணாக்காதீர்கள்' அமைப்பின் நிறுவனர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஜான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், கண் புரை உள்ளவர்களுக்கு கோவை தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் தொண்டு நிறுவனமான ராஜலக்ஷ்மி நேத்ராலாயாவில் இலவசமாக IOL லென்ஸுடன் கூடிய கண் புரை அறுவை சிகிச்சை வழங்கப்படவுள்ளதுடன், உணவு, மருந்து மற்றும் தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும்.
மேலும், அறுவை சிகிச்சை செய்ய விரும்புபவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தவறாமல் கொண்டுவரம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, விட்ரக்டோமி அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான கண் அறுவை சிகிச்சை, விழித்திரை விலகல் அறுவை சிகிச்சை மற்றும் விழித்திரை நோய்க்கான அறுவை சிகிச்சை போன்ற கண் சிகிச்சைகளும் தகுதியுடையவர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்