ஆரா’26 – போர்ட்ஃபொலியோ ஆடை அணிவகுப்பு நிகழ்வு

இந்தச் செய்தியின் வீடியோ லிங்க்கை தொடவும்


கோயம்புத்தூர், கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறையானது 24.01.2026 அன்று ஆரா’26 என்ற நிகழ்வினை நடத்தியது. இந்நிகழ்வு போர்ட்ஃபொலியோ ஆடையை மேடையில் காட்சிப்படுத்தும் விதமாக அமைந்தது. இந்நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.கீதா அவர்கள் தலைமையேற்று, ஆடை வடிவமைப்புத்துறை தற்காலச்சூழலில் சிறப்புடன் வளர்ந்து வருவதோடு, பண்பாட்டில் புதுமைகளைப் புகுத்திச் சமூகத்தின் மேம்பாட்டிற்கும் துணைநிற்கிறது என எடுத்துரைத்தார். இவ்வணிவகுப்பு நிகழ்விற்கான வரவேற்புரையை ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறையின் தலைவர் முனைவர் பி.ரம்யா அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் ஹேம்கா பொட்டிக்கின் உரிமையாளர் செல்வி சஹானா கிரிஷ் அவர்களும், போஷ்ரோபில் வடிவமைப்பாளர் திருமதி அனுரேகா கெளதம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, போர்ட்ஃபொலியோ ஆடை அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களைத் தேர்வுசெய்தனர். இந்நிகழ்வில் ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறை சார்ந்த மாணவர்கள் பண்பாட்டின் வழியே புதுமையை உணர்த்தும் வகையில் போர்ட்ஃபொலியோ ஆடைகளை நேர்த்தியாக அணிந்து அணிவகுப்பில் பங்கேற்றனர். ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறையின் மூன்றாமாண்டு மாணவர்கள் கலந்துகொண்ட இவ்வணிவகுப்பு நிகழ்வில் ரூபாய் 20,500 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இவ்வணிவகுப்பில் முதற்பரிசினை மாணவி கீர்த்தனா அவர்களும், இரண்டாம் பரிசினை மாணவி  திரிநயா அவர்களும், மூன்றாம் பரிசினை மாணவி ரிதனி அவர்களும் பெற்றனர். இந்நிகழ்வு மாணவர்களின் கலை ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் படைப்பாற்றலுடன் கூடிய தொழில் முனைவோராவதற்கான திறனை ஊக்குவிப்பதாகவும் அமைந்தது.


சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்