கோவை வாகராயம்பாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு மத்திய அரசின் "பேச்சான்" அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன

இந்த நியூஸ் வீடியோ touch link news
கோவை வாகராயம்பாளையம் ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில் நெசவாளர்களுக்கான அங்கீகார அடையாள அட்டை (Pehchan Card) வழங்கும் விழா நடைபெற்றது. கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தின் சேலம் நெசவாளர் சேவை மையம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின.
இவ்விழாவில் சேலம் மத்திய அரசு நெசவாளர் சேவை மைய இணை இயக்குனர் கார்த்திகேயன் கலந்துகொண்டு, நெசவாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினார். இந்நிகழ்வில் சில்க் வில்லேஜ் கைத்தறி நிறுவன தலைவர் கைத்தறி முருகேசன், நிர்வாகிகள் பழனிவேல், ராஜாராம் மற்றும் மோப்பிரியபாளையம் பஞ்சாயத்து தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமின் மூலம் வாகராயம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை நெசவாளர்கள் நேரடியாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்