சூலூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 77-வது குடியரசு தின விழா உற்சாகக் கொண்டாட்டம்
கோவை சூலூர் மணியகாரர் அலுவலகம் அருகில், விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் ஒன்றியம் சார்பில் 77-வது குடியரசு தின விழா இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. விஸ்வ ஹிந்து பரிஷத் மாநகர மாவட்ட இணைச் செயலாளர் திரு. கணேஷ் ஜி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாநில இணைச் செயலாளர் வழக்கறிஞர் திரு. விஜயகுமார் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், நமது பாரத நாடு 1947 ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றாலும், நிர்வாக ரீதியான முழு சுதந்திரத்தைப் பெற டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது என்றும், இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அந்தச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்ததன் மூலமே பாரதியர்கள் முழு நிர்வாக அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டனர் என்றும் குறிப்பிட்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினமே குடியரசு தினமாக கொண்டாடப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.
இந்த விழாவில் சூலூர் ஒன்றிய அமைப்பாளர் திரு. முருகவேல், மாநகர மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர் திரு. கிருஷ்ணமாச்சாரி, சூலூர் நகர இளைஞரணி அமைப்பாளர் திரு. சபரிநாதன் மற்றும் நகர நிர்வாகிகள் தினேஷ், ஹரிஷ், சதீஷ், நித்திஷ், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சக்தி சேனா நிர்வாகிகள் அங்காத்தாள், திவ்யா, சுஜிதா மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கொடியேற்றத்திற்குப் பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக, சக்தி சேனா மகளிர் அணி அமைப்பாளர் அங்காத்தாள் நன்றி கூறினார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்