சூலூர்ஒண்டிப்புதூரில் பிரசித்தி பெற்ற சி.எஸ்.ஐ ஆலயத்தில் புத்தாண்டு ஆராதனை கோலாகலம்!!!
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒண்டிப்புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற சி.எஸ்.ஐ சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் 2026-ம் ஆண்டு புத்தாண்டு ஆராதனை மிகவும் சிறப்பாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. இச்சிறப்பு ஆராதனைக்கு ஆலயத்தின் ஆயர்கள் ஆஸ்டின் மற்றும் சாமுவேல் ஜான்சன் ஆகியோர் தலைமை தாங்கி, இறைவனைத் துதிக்கும் பாடல்கள் மற்றும் சிறப்புப் பிரார்த்தனைகளுடன் வழிபாட்டை நடத்தினர்.
ஆராதனையின் போது ஆசியுரை வழங்கிய ஆயர், இந்த புதிய ஆண்டு அனைத்து சமுதாய மக்களிடையேயும் மத நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும், மகிழ்ச்சியையும் நிலைநாட்டும் ஆண்டாக அமைய வேண்டும் என வாழ்த்தினார். இந்த விழாவில் சிறுவர் முதல் பெரியவர் வரை திரளானோர் புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஆராதனை முடிவில் மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு, புதிய ஆண்டை இறை சிந்தனையுடனும் சமூக நல்லிணக்க நோக்கத்துடனும் வரவேற்றனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்