கோவையில் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மத்திய அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.




இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் கோயம்பத்தூர் அலுவலகத்தின் சார்பில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் சூலூர் பேரூராட்சி கலங்கல் ரோட்டில் உள்ள  எஸ் ஆர் எஸ் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது.இதில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், தூய்மை பாரதம், மக்கள் மருந்தகம், பிரதமரின் மக்கள் வங்கி திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி  தலைமை ஏற்று துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்வில், புதுச்சேரி மக்கள் தொடர்பு அலுவலக கள விளம்பர அலுவலர் சக்திவேல் வரவேற்று பேசினார்.சென்னை மக்கள் தொடர்பகத்தின் உதவி இயக்குனர் தே.பாலநாகேந்திரன் நோக்க உரையாற்றினார்.  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் நிதி உதவி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.இந்திய தர நிர்ணய அமைவனத்தின் விஞ்ஞானி வினித் குமார் B.I.S சேவைகளை விளக்கினார். நபார்டு வங்கி, உதவிப்பொது மேலாளர் திருமால் ராவ் மற்றும் பிரதம மந்திரி மக்கள் மருந்தகம் மேற்பார்வையாளர் அரவிந்த் சாமி மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து பேசினர்.மேலும், தருமபுரி கலை நிலா கலைக் குழுவினரின் சார்பில் அரசு நலத்திட்ட விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

---

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்