புத்தாண்டை ஒட்டி புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் நல்லெண்ணெய் காப்பு மற்றும் அருகம்புல் அலங்காரத்தில் காட்சியளிக்கும் விநாயகபெருமான்
முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. விநாயகப் பெருமானுக்கு நல்லெண்ணெய் காப்பு சாத்தப்பட்டு, அருகம்புல் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் திரளாக வருகை தந்து, விநாயகரை வழிபட்ட பின் தங்களது பயணத்தைத் தொடங்கினர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்