கோவையில் பெரும் தீ விபத்து : உதிரிபாகக் கடை டயர்கள், ஆயில் வெடித்துச் சிதறல் - குடியிருப்புகளுக்கும் தீ பரவி வருவதால் பரபரப்பு.

இந்த செய்தியின் வீடியோ லிங்க் தொடவும்

கோவை, காட்டூர், பட்டேல் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்து உள்ள  இயந்திர உதிரிபாகங்கள் விற்பனை கடையில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ மள மளவென எரிய துவங்கியது.உதிரிபாகக் கடைக்கு மிக அருகிலேயே நெருக்கமான குடியிருப்புகள் அமைந்து உள்ளதால், தீயானது அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாகப் பற்றிப் பரவத் துவங்கியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இருப்பினும், குறுகலான வீதிகள் மற்றும் கொழுந்து விட்டு எரியும் தீயினால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டன.இந்நிலைமையில் தீ விபத்தை உணர்ந்த அப்பகுதி பொதுமக்களும் தீயணைப்புத் துறையுடன் கைகோர்த்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர்



சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்