தமிழ்நாடு வர்த்தகர் சங்கம் சார்பில் சூலூரில் புத்தாண்டு கொண்டாட்ட விழா!

                   கருமத்தம்பட்டி டிஎஸ்பி கேக் வெட்டிய படம்
 கோவை, ஜனவரி :
தமிழ்நாடு வர்த்தகர் சங்கமம் கோவை கிழக்கு மாவட்டத்தின் சூலூர் கிளை சார்பாக புத்தாண்டு கொண்டாட்ட விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராக சூலூர் டி.எஸ்.பி (D.S.P) உயர்திரு கரிகால் பாரிசங்கர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் கேக் வெட்டி, அங்கிருந்த வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி தனது புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்விற்குத் தமிழ்நாடு வர்த்தகர் சங்கமத்தின் கோவை கிழக்கு மாவட்டத் தலைவர் நெல்லை காசி எட்வின் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூலூர் அருண்குமார் மற்றும் இரட்டைப் பாதை சிவபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளைச் சூலூர் கிளையின் நிர்வாகிகள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். இதில் சூலூர் கிளைத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஆறுகுமாரவேல், பொருளாளர் சுடலை, ஒருங்கிணைப்பாளர் பிரபு, ஆலோசகர்கள் கண்ணன் மற்றும் பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் வர்த்தகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
புத்தாண்டு காலத்தில் வர்த்தகர்களின் ஒற்றுமையையும், சமூக நல்லிணக்கத்தையும் பேணும் வகையில் இந்த விழா அமைந்திருந்தது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்