மஜக-வில் இணைந்த IMMK முன்னாள் மாநிலச் செயலாளர்: கோவையில் வலுவடையும் மனிதநேய ஜனநாயக கட்சி!
சமீப மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களில் இருந்து பலரும் தன் விருப்பத்தோடு மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் (IMMK) முன்னாள் மாநில செயலாளர் கோவை R.M. ரஃபி அவர்கள் இன்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் முன்னிலையில் தன்னை மஜக-வில் இணைத்துக் கொண்டார்.
இவர் முன்பு ஏழு மாவட்டங்கள் அடங்கிய கொங்கு மண்டல தமுமுக-வின் செயலாளராக சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் கோவை மத்திய மாவட்ட பொருளாளர் வசீர் அகமது அவர்களும் தன்னை மஜக-வில் இணைத்துக் கொண்டார். திருச்சியில் இன்று மதியம் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநில செயலாளர் அகமது கபீர் மற்றும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் ஹெச்.எம். முகமது ஹனீஃப் ஆகியோர் உடனிருந்தனர்.
இயக்கப்பணிகளில் நீண்ட காலம் பணியாற்றிய நிலையில், தெளிவான கொள்கை கொண்ட ஒரு அரசியல் களத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் இம்முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் ஈர்ப்பின் காரணமாக இன்னும் பல மாவட்டங்களில் இருந்தும் பலர் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
கடந்த ஒரு வாரமாக இவர்கள் மஜக இணைப் பொதுச் செயலாளர் கேப்டன் செய்யது முகம்மது பாரூக் அவர்களுடன் தொடர்ந்து உரையாடி வந்த நிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. விரைவில் கோவையில் பெருந்திரளானோர் மஜக-வில் இணையும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படும் என்றும் அவர்கள் இருவரும் உறுதியளித்துள்ளனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்