நெஹ்ரு இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில், Rademics Research Institute (PublicationMart.com) சார்பில் உருவாக்கப்பட்ட நவீன SaaS அடிப்படையிலான டிஜிட்டல் பப்ளிஷிங் தளம் PublicationMart.com அறிமுகம்
இந்த நியூஸ் இன் வீடியோ லிங்க் வேண்டுமென்றால் தொடவும்
.
நெஹ்ரு இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில், Rademics Research Institute (PublicationMart.com) சார்பில் உருவாக்கப்பட்ட நவீன SaaS அடிப்படையிலான டிஜிட்டல் பப்ளிஷிங் தளம் PublicationMart.com அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த தொழில்நுட்ப தளத்தின் தொடக்க விழாவில், Rademics Research Institute நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் (Founder & Director) டாக்டர் R. ரஞ்சித் மற்றும் நிர்வாக மேலாளர் (Executive Manager) திருமதி திவ்யா ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு தளத்தின் சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தினர்.
PublicationMart.com மூலம், வெறும் 120 விநாடிகளில் ஒரு முழுமையான புத்தகத்தை உருவாக்க முடியும் என்பது முக்கியமான அம்சமாகும். இதில் புத்தக உள்ளடக்கம் மட்டுமல்லாமல், தலைப்பு பக்கம் (Cover Page), வடிவமைப்பு (Formatting) உள்ளிட்ட அனைத்து வெளியீட்டு தேவைகளும் தானாக உருவாக்கப்படுகின்றன.இந்த தளத்தில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மிகக் குறைந்த நேரத்தில் தரமான நூல்களை வெளியிட முடிகிறது.
PublicationMart என்பது ஒரு All-in-One Digital Publishing Platform ஆகும். இது குறிப்பாக,
• கல்வி மற்றும் ஆராய்ச்சி புத்தகங்கள்
• தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப நூல்கள்
• கல்வி பாடப்புத்தகங்கள்
• தொகுப்பு நூல்கள் (Edited Volumes) மற்றும் புத்தக அத்தியாயங்கள்
ஆகியவற்றை வெளியிட முழுமையான ஆதரவை வழங்குகிறது.
இதன் முக்கிய அம்சங்களில்,
Smart Writing Engine மூலம் 120 விநாடிகளில் முதல் வரைவு தயாரிப்பு, தானியங்கி வடிவமைப்பு வசதி, Custom Cover Design Tools,
ISBN உடன் புத்தக வெளியீடு,
உலகளாவிய Digital Bookstore வாய்ப்பு ஆகியவை இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்வில் பேசிய டாக்டர் R. ரஞ்சித்,
“உயர்தரமான புத்தக வெளியீடு அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்க வேண்டும் என்பதே PublicationMart-இன் நோக்கம்” என தெரிவித்தார்.
மேலும் திருமதி திவ்யா ரஞ்சித் அவர்கள்,
“முதல் முறையாக எழுத தொடங்கும் ஆசிரியர்களிலிருந்து அனுபவமிக்க ஆராய்ச்சியாளர்கள் வரை அனைவருக்கும் Manuscript முதல் Marketplace வரை முழுமையான Publishing Partner ஆக PublicationMart செயல்படும்” என கூறினார்.
Rademics Research Institute (PublicationMart.com) பாரம்பரிய வெளியீட்டு தடைகளை அகற்றி, எளிதான, வேகமான மற்றும் நம்பகமான டிஜிட்டல் பப்ளிஷிங் சூழலை உருவாக்குவதை தனது முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்