ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் "கிரிடைஸ் 2026" கோலாகல கொண்டாட்டம்.
கோவை கக சாவடி பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் தேசிய அளவிலான இன்டர் கல்லூரி கல்ச்சுரல் ஃபெஸ்ட்டுவெல் கிரிடைஸ் 2026 என்ற தலைப்பில் நிகழ்ச்சி தேசிய அளவில் அனைத்து கல்லூரிகளுக்குமான இன்டர் கல்லூரி கல்ச்சுரல் ஃபெஸ்ட்டுவெல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் சாத்து குட்டி,செயலாளர் ஸ்ரீ ஹரி,பின்னணி பாடகி தீப்தி சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இவ்விழாவில் கலந்துகொண்ட கல்லூரி முதல்வர் முனைவர் கல்பனா வரவேற்புரையாற்றினார்.ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் வழக்கறிஞர் சாத்துக்குட்டி கலை விழாவின் முக்கியத்துவத்தையும் மாணவர்களின் திறமை, ஒற்றுமை ஆகியவற்றையும் எடுத்துரைத்து மாணவர்கள் மத்தியில் தலைமையுரையாற்றினார்.ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் செயலர் ஸ்ரீஹரி வாழ்த்துரை வழங்கி அவர் கூறியதாவது இன்றைய தலைமுறை மாணவர்கள் மிகவும் ஆக்கபூர்வமாகவும்,கற்பனை நயத்துடனும்,சிந்தனை ஆற்றலுடனும் இருக்கிறார்கள் அதனை பயன்படுத்துவதற்கு இதுபோன்ற கலை விழா மேடையாக அமைகிறது என்றும் மாணவர்களுக்கு அறிவுரையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு கேரளா உட்பட 37 கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல கல்லூரியின் சார்பில் பேருந்து வசதி மற்றும்
மதிய உணவு உட்பட மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாராயண குரு கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.நிகழ்ச்சியின் இறுதியாக ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் சத்யா தேவி நன்றியுரை வழங்கினார்.நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கான தனி நடனம், குழு நடனம், தனிப்பாடல், குழு பாடல் தமிழ், மலையாளம், ஆங்கிலம் சொற்போர் உள்ளிட்ட 15-க்கு மேற்பட்ட கலைவிழா போட்டிகள் நடைபெற்றன கலை விழா போட்டியின் முக்கிய நிகழ்ச்சியான மிஸ் கிரிடைஸ்,மிஸ்டர் கிரிடைஸ் போன்ற போட்டிகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்