ஒரே மேடையில் சிலம்பம், யோகா,பரதம்! - கோவை பள்ளி மாணவர்கள் படைத்த பிரம்மாண்ட உலக சாதனை!"​"450-க்கும் மேற்பட்ட மாணவர்கள்,70 நிமிடம் இடைவிடாத ஆட்டம்! - கிரகாம்பெல் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடிப்பு


கோவை சூலூர் பாப்பம்பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியான வளர்மதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ‘கிரகாம்பெல் வேர்ல்ட் ரெக்கார்டு’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துப் பெரும் சாதனை படைத்துள்ளனர்.
 இப்பள்ளியில் நடைபெற்ற உலக சாதனைப் போட்டியில், 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து சிலம்பம், யோகா, பரதநாட்டியம் மற்றும் கராத்தே போன்ற கலைகளை ஒரே நேரத்தில் ஒரு மணி நேரம் 10 நிமிடம் தொடர்ந்து இடைவிடாமல் செய்து காட்டி அசத்தினர்.
இந்தச் சாதனை நிகழ்வின் நிறைவாகப் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. இவ்விழாவில்  பள்ளியின் தாளாளர் வைதியநாதன், இயக்குனர் ஜெய்கணேஷ், முதல்வர் வனிதா மேலும், வேங்கை சிலம்பம் தமிழ்க் கலை கூடம் கோயம்புத்தூர் ஆசான் அ. ஞானசேகரன், வேங்கை சிலம்பொலி பயிற்றகம் பட்டணம் புதூர் ஆசான் த. மனோஜ் குமார் மற்றும் கிரகாம்பெல் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாணவர்களின் திறமையைப் பாராட்டிச்  கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

இது குறித்துப் பேசிய மாணவர்கள், பள்ளியில் இது போன்ற சாதனை நிகழ்வுகள் நடைபெறுவது தங்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருவதாகவும், இத்தகைய முயற்சி தங்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையையும், எதிர்காலச் சாதனைகளுக்கான உத்வேகத்தையும் அளிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்