சின்மயா மிஷன் கோயம்புத்தூர் கொண்டாட்டம் 75வது ஆண்டு.
மஹா சிவராத்திரியன்று சின்மயா மிஷன் கோயம்புத்தூர் நடத்தும் சமஷ்டி ஹனுமான் சாலிஸா ஹோமம்.சின்மயா இயக்கத்தின் 75வது ஆண்டு - "சின்மய அமிர்த மஹோத்ஸவம்" இதனை கொண்டாடும் வகையில் சின்மயா மிஷன், கோயம்புத்தூர், '108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்' என்கிற உலகம் முழுவதும் நடைபெற்று வரும் கூட்டு பிரார்த்தனை முறையில், 15.02.2026 ஞாயிறு அன்று வடவள்ளியில் உள்ள மருதம் விளையாட்டு அரங்கத்தில் சின்மயா மிஷன், கோயம்புத்தூர் ஏற்பாடு செய்துள்ளது.காலை 5.00 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடல் நலன், உள்ளத் தூய்மை, உலக நன்மை ஆகிய உயரிய நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த ஹோமத்தில் அனைவரும் பங்கேற்று பயன்பெற சின்மயா மிஷன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை ஹனுமன் சாலிசாவை பாராயணம் மற்றும் ஹோமம் செய்வதால், பரமசிவனின் புத்திரன், மற்றும் சூரிய பகவானின் சீடன் மற்றும் ஸ்ரீ ராமபிரானின் பக்தனான ஸ்ரீ ஹனுமனின் பேரருள் பெற முடியும்.நிகழ்விடத்தில் பாராயணம் செய்வது முற்றிலும் இலவசமானது. முன்பதிவு தேவையில்லை.
ஹோமத்தில் பங்குபெற விரும்புபவர்கள் தயவுசெய்து நுழைவுச்சீட்டை (Pass) பெற்றுக்கொள்ளவும். உங்கள் வசதிக்கேற்ப உங்கள் 45 நிமிடங்களை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.உங்களுக்காக நீங்களே செய்யும் இந்த ஹோமத்தில் தனிநபராகவோ அல்லது குழுவாகவோப் பங்குபெற மற்றும் ஹோமத்திற்கான நன்கொடை அளிக்க திரு. வேணுகோபால் (ஒருங்கிணைப்பாளர்) செல் 96552 45870 அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.வேணுகோபால் ஒருங்கிணைப்பாளர்
சின்மயா மிஷன்
அலுவலகம்: 87547 33782 | மின்னஞ்சல்: srichinmaya@gmail.com.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்