தூய்மைப் பணியாளர்களின் பசி தீர்க்கும் சூலூர் மாடல்!" -தற்போது தமிழக முழுவதும் முதல்வரால் நிறைவேற்றம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த நெகிழ்ச்சித் திட்டம்! கொடுத்துக முதல்வருக்கு பேரூராட்சி தலைவர் நன்றி

இந்தச் செய்தியின் வீடியோ லிங்க்
கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னையில் காணொளி காட்சியின் மூலமாக முதல்வர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்ததை அடுத்து, பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு, பணியாளர்களுக்குத் காலை உணவை வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாகச் சூலூர் பேரூராட்சியில் மட்டுமே வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வந்த இந்தச் சத்தான உணவுத் திட்டத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் எனத் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுத் தற்போது இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ள முதலமைச்சருக்குத் தலைவர் தேவி மன்னவன் நெகிழ்ச்சியுடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். 

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்