இருகூரில் அதிமுக இளைஞர் அணி அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைப்பு


கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இருகூர் பகுதியில் அதிமுக வடக்கு மாவட்ட இருகூர் நகர இளைஞர் அணி சார்பில் புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. நகர இளைஞர் அணி செயலாளர் உமா சங்கர் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல், இருகூர் நகரச் செயலாளர் ஆனந்த், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தேப்பு.கா அசோகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அலுவலகத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, இப்பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்