ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் ஊர்ஜா கலை விழாவில் உயர் ரக வர்ண்ண கார்களின் அணிவகுப்பு.

கோவையில் கந்தே கவுண்டன் சாவடி பகுதியில்  இயங்கி வரும் ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியில் ஊர்ஜா  கலை விழா நடைபெற்றது.இவ்விழாவில் ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் வழக்கறிஞர் சாத்து குட்டி,செயலர் ஸ்ரீஹரி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கிவைத்து தலைமை உரையாற்றி சிறப்பித்தனர்.நிகழ்ச்சியை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர்  கல்பனா அனைவரையும் வரவேற்று பேசினார்
இதில் துணைத் தலைவர் சைலஜா வேணு, இணைச்செயலாளர் பங்கஜ்குமார் , பொருளாளர் சஜீஷ்குமார்,,  கல்லூரி முதன்மை அலுவலர்  அஸ்வின் ஆகியோர்  இவ்விழாவில் கலந்து கொண்டனர். 
கலையியல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மஞ்சு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.முன்னதாக  உயர்ரக  கார்களின் சாகச நிகழ்ச்சி பிரம்மாண்டமாக  நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து ஸ்ரீநாராயண குரு கல்லூரி மாணவர்களின் ஆடல் பாடல் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் எம் சி கூப்பர்,லில் பையன்,டிகால்ட்டி போன்ற ராப் பாடகர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்