PSG டெக் வளாகத்தில் ‘இளைய சுற்றுச்சூழல் விஞ்ஞானி’ இறுதி விளக்கவுரை நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு.
கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள PSG டெக் வளாகத்தில், தொழிலக கழிவுகள் மேலாண்மை கூட்டமைப்பு மற்றும் PSG மேம்பட்ட ஆய்வு நிறுவனம் (PSG IAS) இணைந்து நடத்திய இளைய சுற்றுச்சூழல் விஞ்ஞானி (Young Environmental Scientist) திட்டத்தின் இறுதி விளக்கவுரை நிகழ்ச்சி இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.பல மாதங்களாக நடைபெற்ற இந்தத் திட்டத்தில், 109 அணிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆரம்பத் தேர்வுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 அணிகள், தங்களின் சுற்றுச்சூழல் சார்ந்த புதுமையான மாதிரிகளை நிபுணர் குழுவிற்கு விளக்கினர். இதில், இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவுகளில் சிறந்த 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு பணப் பரிசுகள் வழங்கப்பட்டன.CODISSIA தலைவர் திரு. கார்த்திகேயன், PSG IAS இயக்குனர் டாக்டர் கஞ்சன்னா மற்றும் சின்னவேடம்பட்டி தொழில் சங்க தலைவர் திரு. தேவகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தனர்.இந்நிகழ்ச்சி, பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் இளம் தலைமுறையின் முயற்சிகளை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மேடையாக அமைந்தது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்