சூலூரில் ரூ.1.88 கோடியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 கோவை மாவட்டம் சூலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலமான 1800-களிலேயே தொடங்கப்பட்டு, நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்குப் புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காகப் பத்திரப் பதிவுத் துறை சார்பில் 188.81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய அலுவலகக் கட்டிடத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சூலூரில் நடைபெற்ற விழாவில், மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் ஒன்றிய செயலாளர் மன்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், மாவட்டப் பதிவாளர் ஜெயபிரகாஷ், சூலூர் சார்பதிவாளர் மரிய ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், கவுன்சிலர் பசுமை நிழல் விஜயகுமார், அலுவலகப் பணியாளர்கள், ஆவண எழுத்தர்கள் உள்ளிட்டப் பலரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். பழமையான கட்டிடத்திற்கு மாற்றாகக் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய அலுவலகம் இப்பகுதி மக்களுக்குப் பெரும் பயனுள்ளதாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்