இருகூர் பேரூராட்சியில் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள்: பூமி பூஜை செய்து பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்!

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், சுமார் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான துவக்க விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, காமாட்சிபுரம் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் இருகூர் பேரூராட்சி தலைவர் சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, பணிகளை முறைப்படி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.



இந்த விழாவில் பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயக்குமார், 17-வது வார்டு கவுன்சிலர் முருகசாமி, 16-வது வார்டு கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


 இப்பணிகள் நிறைவடையும் பட்சத்தில் காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட கால போக்குவரத்துப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்,
வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. காமாட்சிபுரம் திமுக அலுவலகம் முன்பாக அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்த நிர்வாகிகள், பின்னர் கேக் வெட்டி பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர். இதில் திரளான கட்சித் தொண்டர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்