உருமாண்டம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நூற்றாண்டு நிறைவு விழா






கோவை உருமாண்டம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக அக்வாசப் இன்ஜினியரிங் டெக்ஸ்மோ ராமசாமி நினைவாக கட்டப்பட்ட புதிய வகுப்பு கட்டிடம், மஹாராஜா குரூப்ஸ் யு.கே.பாபு, ஹேமலதா குடும்பத்தினர் சார்பாக கட்டப்பட்ட நுழைவுவாயில் கட்டிடம் சூரியா இன்டஸ்ட்ரீஸ் யோகானந்தம், கலைமணி ஆகியோர் வழங்கிய குழந்தைகளுக்கான அனைத்து வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய விளையாட்டு திடல் உள்ளிட்டவகளுக்கான திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு 14வது வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேல் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி ராமநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த விழாவிற்கு பள்ளி விழா கமிட்டியினர் மெளனசாமி, சுந்தரம், கந்தசாமி, சர்க்கரையப்பன், தேவேந்திரன், ஆடிட்டர் கதிர்வேலு, முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், அக்வாசப் இன்ஜினியரிங் துணைத்தலைவர் வேலுச்சாமி, கோவை மாவட்ட மூத்த சிவில் நீதிமதி முன்னாள் நீதி அரசர் ரிஷி ரோஷன், வெள்ளக்கிணர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சிவசாமி, 13வது வார்டு செயலாளர் சுமதி நாகராஜ், முன்னாள் தாசில்தார் ஐயாசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஞானபண்டிதன், திருக்குறள் வாழ்வியல் அறக்கட்டளை மேகா நித்தியானந்தபாரதி ஆகியோர் கலந்துக்கொண்டு நுழைவாயில், வகுப்பறை கட்டிடம் மற்றும் விளையாட்டு திடலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். தொடர்ந்து பணி ஒய்வு பெறும் தலைமை ஆசிரியர், சிறப்பாளர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டன. அதேபோல, மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் மாணவர்கள் யு.எம்.கிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் சண்முகசுந்தரம், டெம்போ ராமசாமி, பந்தல்வீடு பிரகாஷ், கதிர்வேல், தாடி பழனிச்சாமி, சுப்பிரமணியம், மருதாசலம், மோகன்ராஜ், சிவமூர்த்தி, வெள்ளியங்கிரி, கிருஷ்ணன், ராதிகா, அழகுலட்சுமி, பாக்கியலட்சுமி உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் திரளாக கலந்துக்கொண்டனர். இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி செளந்தரராஜன் நன்றி கூறினார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்