பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும் யுஜிசி நிதியுதவி பெற்ற மகளிர் படிப்பு மையம் கே சி டபிள்யூ - கேர்ஸ் ஆற்றல் ஆய்வு மையம், கே சி டபிள்யூ ரோட்ட ராக்ட் கிளப் & ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டியுடன் இணைந்து இன்று சந்திரா கருத்தரங்கக் கூட்டத்திலும் பி எஸ் ஜி ஆர் கே சி முன்னாள் மாணவர் பொன்விழா
பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும் யுஜிசி நிதியுதவி பெற்ற மகளிர் படிப்பு மையம் கே சி டபிள்யூ - கேர்ஸ் ஆற்றல் ஆய்வு மையம், கே சி டபிள்யூ ரோட்ட ராக்ட் கிளப் & ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டியுடன் இணைந்து இன்று சந்திரா கருத்தரங்கக் கூட்டத்திலும் பி எஸ் ஜி ஆர் கே சி முன்னாள் மாணவர் பொன்விழா
அரங்கத்திலும் "யுவதி - 26" என்னும் பெயரில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்களை நிகழ்த்தியது நடைபெற்ற இந்நிகழ்வில் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் செயலர் டாக்டர் நா. யசோதா தேவி அவர்கள் வரவேற்புரை நல்கினார்.ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டியின் தலைவர் ஆர் டி என் டாக்டர் ஜி. சுரேஷ் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் ஆற்றல் ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சி.ஷர்மிளா அவர்களின் மதிப்பீட்டில் "எரிசக்தி துறையில் எல்லைப் புறத்தில் பெண்கள்: தலைமைத்துவ சவால்கள் மற்றும் தாக்கம் என்னும் தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்வில் குழு உறுப்பினர்களாக கோயம்புத்தூர் ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்சின் உற்பத்தி இயக்குனர் திருமதி மிருணாளினி செல்லப்பன், சென்னை தியானோ பிரைவேட் லிமிடெட் தொழில்நுட்ப இயக்குனர் திருமதி வனஜாம்பிகா ஜெயக்குமார், கோயம்புத்தூர் கேர்ஸ் ரெனவயபிள்ஸ் இயக்குனர் திருமதி சரண்யா ரகுராம், கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கல்விப்புல முதன்மையர் டாக்டர் கே.எஸ். சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ரோட்டரி கோவை சிட்டியின் ரோட்டரி செயலாளர் எம் முருகன் அவர்கள் நிகழ்வு குறித்த பாராட்டுறையை வழங்கினார்.விழாவின் நிறைவாக கல்லூரியின் விமன்ஸ் ஸ்டடிஸ் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் எம். ஜெயமாலா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.மகளிர் தினக் கொண்டாட்டத்தின் அடுத்த நிகழ்வானது பிஎஸ்ஜி ஆர் கே சி முன்னாள் மாணவர் பொன்விழா அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் செயலர் டாக்டர் நா. யசோதா தேவி அவர்கள் வரவேற்புரை நல்கினார்.புதுமையான பாடத்திட்டம் மற்றும் கல்வி வடிவமைப்பு ஆலோசகர் உளவியலாளர் மற்றும் ஆசிரியர் திருமதி ஆர்த்தி சி ராஜரத்தினம் அவர்கள் மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.பள்ளிக்கல்வித்துறையின் சமக்ர சிக்ஷா மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆலோசகர் டாக்டர் எஸ். மதனகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறந்த பெண்மணிகளுக்கு WoW விருதுகளை வழங்கினார்.ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டியின் தலைவர் ஆர் டி என் டாக்டர் ஜி. சுரேஷ் அவர்கள் நிகழ்வின் பாராட்டுரையை வழங்கினார்.நிகழ்ச்சியின் நிறைவாக பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.பீ ஆரதி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.இந்நிகழ்வினைத் தொடர்ந்து கே சி டபிள்யூ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பின்னணிப் பாடகர் திரு ஆபிரகாம் நித்ய பாண்டியன் அவர்கள் பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.அதனைத் தொடர்ந்து டிஜே நிகழ்ச்சியும் நடைபெற்றது. டாக்டர் எம். ஜெயமாலா, டாக்டர் ஜெ. ஷீலா, டாக்டர் சி. ஷர்மிளா, டாக்டர் எஸ். கீதா, டாக்டர் இரா. சுஜாதா ஆகியோர் கே சி டபிள்யூ வின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகச் சிறப்பாகச் செயலாற்றினர். ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டியின் தலைவர் டாக்டர் ஜி.சுரேஷ், செயலாளர் எம். முருகன், திட்டத்தலைவர் ஆர். ஜெகன்மோகன், திட்டத்துணைத் தலைவர் டாக்டர் எம்.கலைவாணி ஆகியோரின் வழிநடத்துதலோடு விழா இனிதே நிறைவடைந்தது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்