சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் உயர் மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் உயர் மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் உயர் மட்ட ஆலோசனை குழு கூட்டம், சாய்பாபா காலணி பகுதியில் நடைபெற்றது. அந்த இயக்கத்தின் தலைவர் ரபீக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் புனரமைப்பு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. கிருத்துவர்கள், இஸ்லாமியர்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர்.  மேலும் மக்களிடையே எந்த வகையில் தேவையில்லா குழப்பமோ, பிரச்சனையோ ஏற்படாமல் இருக்க திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். அதே போல எச்.ராஜா பேசி சர்ச்சை ஏற்பட்ட போது விஜய் என பெயர் விவகாரம் பேசு பொருளானது. ஆனால் இப்போது புதிதாக தன்னை ஜோசப் விஜய் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சிறுபான்மை மக்கள் இதனை நம்ப மாட்டார்கள் என ரபீக் தெரிவித்தார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்