ரஷ்யக் கல்விக் கண்காட்சி!இந்திய மாணவர்களுக்காக 10,000 எம்.பி.பி.எஸ் இடங்களில் ஒதுக்கீடு.


ரஷ்யக் கல்விக் கண்காட்சி!
இந்திய மாணவர்களுக்காக 10,000 எம்.பி.பி.எஸ் இடங்களில் ஒதுக்கீடு. 
வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயில்வது தொடர்பாக இந்திய தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வகுத்துள்ள புதிய விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுகிறது ரஷ்யா.ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் படிப்பினை ஆண்டுக்கு ரூ. 3.5 லட்சம் என்ற மிகக் குறைந்த செலவில் கற்க முடியும். 
200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில் உயர்கல்வி பயில 100% கல்வி உதவித் தொகை.

வரும் 2026 - 27 ஆம் கல்வியாண்டிற்கான அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சி, கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் தி கிராண்ட் ரீஜென்ட் மே 15 தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ஏழு முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் நேரடியாகப் பங்கேற்கும் இக்கண்காட்சியில், இந்திய மாணவர்களுக்காக 10,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயில்வது குறித்து இந்திய தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள சமீபத்திய விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றும் ஒரே வெளிநாடு ரஷ்யா மட்டுமே ஆகும்.

இக்கண்காட்சியானது கோயம்புத்தூர் தவிர மதுரையில் மே 12 அன்று ஹோட்டல் ராயல் கோர்ட்டில், மே 13 அன்று, திருச்சியில் ஹோட்டல் ஃபெமினாவிலும், மே 14 அன்று சேலத்தில் ஜி.ஆர்.டி ஹோட்டல் ஜிபேயிலும் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் எம்.பி.பி.எஸ் மற்றும் இதர படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை நடைபெறும். அனுமதி இலவசம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மாணவர்கள் 9282 221 221 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 
இப்படிப்புகளுக்கு ரஷ்ய அரசாங்கம் அதிகளவில் மானியம் வழங்குவதால், இதற்கான கட்டணம் ஆண்டுக்கு மிகக்குறைவாக ரூ. 3.5 லட்சம் முதல் தொடங்குகிறது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தொடர்புடைய முக்கியப் பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் (எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு 40% மட்டுமே) பெற்ற இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் பயின்ற மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி (CET), ஐ.இ.எல்.டி.எஸ் (IELTS) போன்ற தகுதித் தேர்வுகள் எதுவும் தேவையில்லை.

இக்கல்விக் கண்காட்சியில் பயோ-டெக்னாலஜி (Bio-technology), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் தரவு அறிவியல் (Data Science) போன்ற வளர்ந்து வரும் நவீனத் துறைகளில் படிப்புகளை வழங்கும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களும் பங்கேற்கின்றன. 

இக்கண்காட்சியில் பங்கேற்கும் பல்கலைக்கழகங்களில் பின்வருவன அடங்கும்: வோல்வோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், வோல்வோகிராட் (Volvograd State Medical University); நேஷனல் ரிசர்ச் நியூக்ளியர் யுனிவர்சிட்டி MEPhI, மாஸ்கோ (Russian National Research Medical University, Moscow); இம்மானுவேல் கான்ட் பால்டிக் ஃபெடரல் பல்கலைக்கழகம், கலினின்கிராட் (Immanuel Kant Baltic Federal University, Kaliningrad); கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், கசான் (Kazan State Medical University, Kazan); வடக்கு காகசஸ் ஃபெடரல் பல்கலைக்கழகம், ஸ்டாவ்ரோபோல் (North Caucasus Federal University, Stavropol); மாஸ்கோ ஏவியேஷன் இன்ஸ்டிடியூட், மாஸ்கோ (Moscow Aviation Institute, Moscow); மற்றும் பிரோகோவ் ரஷ்ய தேசிய ஆராய்ச்சி மருத்துவப் பல்கலைக்கழகம், மாஸ்கோ (Pirogov Russian National Research Medical University, Moscow) 

இக்கண்காட்சியின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சென்னை ரஷ்யன் ஹவுஸின் துணைத் தூதரும் இயக்குநருமான Mr. Alexander Dodonov மற்றும் ரஷ்யப் பல்கலைக்கழகங்களின் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பிரதிநிதியும் ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான Mr. C. Ravi Chandran ஆகியோர் உரையாற்றினர்.

இது குறித்து சென்னை ரஷ்யன் ஹவுஸின் துணைத் தூதரும் இயக்குநருமான Mr. Alexander Dodonov கூறுகையில், "உலகளவில் உயர்தர மருத்துவக் கல்வியை வழங்குவதில் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் நீண்டகால நற்பெயரைக் கொண்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருகின்றனர். ரஷ்யப் பல்கலைக்கழகங்கள், இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) மாறிவரும் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைத் தீவிரமாகப் பின்பற்றி, தங்களது எம்.பி.பி.எஸ் படிப்புகள் இந்தியாவில் முழுமையாக அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்கின்றன. இதன் காரணமாகவே, வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களின் முதன்மைத் தேர்வாக ரஷ்யா தொடர்ந்து நீடிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மதிப்புமிக்க, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் குறைந்த செலவிலான கல்வியைப் பெற ரஷ்யாவிற்குச் செல்கின்றனர். ஒரு விரிவான பாடத்திட்டம், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் மேம்பட்ட வசதிகளுடன், ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் அங்கு மருத்துவக் கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு ஒரு வலுவான கற்றல் சூழலை வழங்குகின்றன”.

கல்வி உதவித் தொகை திட்டங்கள் குறித்து கூறுகையில்: "கடந்த காலங்களைப் போலவே, ரஷ்ய அரசின் வருடாந்திர 100% கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் இந்த ஆண்டும் 200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். இது ரஷ்யாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, மற்றும் முதுகலை ஆராய்ச்சிப் படிப்புகளை அவர்கள் முற்றிலும் இலவசமாகப் பயில வழிவகுக்கும். ரஷ்ய அரசாங்கம் பெருமளவு மானியம் வழங்குவதால், அங்கு கல்விச் செலவு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இந்திய மாணவர்களுக்கெனப் பல பல்கலைக்கழகங்கள் சிறப்புத் தழுவல் திட்டங்களையும் (Special adaptation programs) ஆதரவு அமைப்புகளையும் கொண்டுள்ளதால், மாணவர்களுக்குத் தேவையான உதவிகள் தடையின்றி கிடைக்கின்றன" என்றார்.

ஸ்டடி அப்ரோட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ், நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் 
Mr. C. Ravi Chandran, கூறுகையில் “ரஷ்யா முழுவதிலும் உள்ள சுமார் 600 அரசுப் பல்கலைக்கழகங்களில், 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,00,000-க்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் பயின்று வருகின்றனர். பொதுவாக, ரஷ்யாயாவில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களிடையே மருத்துவத் துறையே மிகவும் பிரபலமான ஒன்றாகத் திகழ்கிறது.

தற்போது, இந்தியாவின் எம்.பி.பி.எஸ் (MBBS) பட்டத்திற்கு இணையான எம்.டி (M.D) பட்டத்தை வழங்கும் சுமார் 30 ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் ஏறத்தாழ 25,000 இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றன; குறிப்பாக, எம்.பி.பி.எஸ் படிப்பின் காலம், பயிற்சிக் காலம் (Internship), பாடத்திட்டம் மற்றும் பயிற்று மொழி (ஆங்கிலம்) தொடர்பாக 2021 நவம்பரில் வெளியிடப்பட்ட சமீபத்திய விதிமுறைகளையும் இவை முறையாகக் கடைபிடிக்கின்றன. வெளிநாடுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் சூழல்களால் இந்திய மாணவர்களின் பாதுகாப்பிற்கும் கல்விக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு இந்த நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. 

மேலும், டெல்லியில் உள்ள அகாடமி ஃபார் ஃபாரின் மெடிக்கல் கிராஜூவேட்ஸ் (Academy for Foreign Medical Graduates) மூலம் இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் எட்டு வார காலத் தீவிரப் பயிற்சி, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதை உறுதி செய்யும் ஒரு நம்பிக்கையூட்டும் அம்சமாகும்" என்று அவர் மேலும் கூறினார்.

கூடுதல் விவரங்கள் மற்றும் உடனடிச் சேர்க்கைக்கு (Spot admissions), மாணவர்கள் 'அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சி 2026'-இல் பங்கேற்கலாம். 2026 செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கும் 2026-27 கல்வியாண்டிற்கான இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான தகுதியை உறுதிப்படுத்தும் முறையான ஆவணங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்