கோவையில் யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டி : லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து வனிதா முதலிடம்.




இந்தியா யமஹா மோட்டார்  பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அதிநவீன ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் எரிபொருள் திறனை வெளிப்படுத்தும் வகையில், கோயம்புத்தூரில் பிரம்மாண்ட, 
ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டியை நடத்தியது.
யமஹா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களான ‘சிஏஜி என்டர்பிரைசஸ்’  மற்றும் ‘ஆர்பி ஏஜென்சிஸ்’  ஆகியவற்றுடன் இணைந்து மே 31 அன்று நடைபெற்ற இந்த  போட்டியில், ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன்  பங்கேற்றனர். யமஹாவின் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர்   மற்றும் ஸ்டாப் & ஸ்டார்ட் சிஸ்டம்  ஆகிய தொழில்நுட்பங்கள் இணைந்து, வாகனங்களின் எரிபொருள் திறனை பெருமளவு அதிகரிப்பதோடு உமிழ்வையும் குறைக்கின்றன. சத்தமில்லாமல் இன்ஜினை ஸ்டார்ட் செய்வது, சீரான வேகத்திற்கு மின்சார-உதவி முறுக்குவிசையை வழங்குவது மற்றும் சிக்னல்களில் வாகனம் நிற்கும் போது எரிபொருளைச் சேமிக்க இன்ஜினை தானாகவே நிறுத்துவது போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. இது ரைடர்களுக்கு சிறந்த ஓட்டுநர் அனுபவத்தையும், குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பையும் வழங்குகிறது.இந்த மைலேஜ் சவாலுக்காக மோட்டார்சைக்கிள்களுக்கு சுமார் 62 கிலோமீட்டர் தூரமும், ஸ்கூட்டர்களுக்கு சுமார் 34 கிலோமீட்டர் தூரமும் கொண்ட பாதைகள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. நகரச் சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் மற்றும் திறந்தவெளிச் சாலைகள் என அனைத்தும் கலந்த இந்த பாதையில், பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களின் சஸ்பென்ஷன், பிரேக்கிங், வேகம் மற்றும் பிக்-அப் ஆகியவற்றை நிஜ உலகச் சூழலில் சோதித்து அறிந்தனர்.
துல்லியமான மைலேஜைக் கணக்கிடுவதற்காக, போட்டிக்கு முன்னும் பின்னும் அனைத்து வாகனங்களுக்கும் சீரான முறையில் எரிபொருள் நிரப்பப்பட்டு, நுகர்வு விவரங்கள் மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன.
போட்டியில் அதிக மைலேஜ் பெற்று சாதனை படைத்த முதல் 3 வெற்றியாளர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதில்  மோட்டார்சைக்கிள் பிரிவில் முதல் 3 இடங்களை முறையே 
 அன்னாவி (108.25 கி.மீ ), 
 ராஜலிங்கம் (94.36 கி.மீ ),  அரவிந்த் (93.56 கி. மீ) ஆகியோரும், 
ஸ்கூட்டர் பிரிவில்  முதல் 3 இடங்களை முறையே 
வனிதா ( 113.03 கி.மீ),  பிரியா ( 105.89 கி.மீ),  ஆதிரா (93.48 கி.மீ)  ஆகியோரும் வென்றனர் 
மைலேஜ் போட்டி மட்டுமின்றி, வாகனங்களை சிறப்பாகப் பராமரிப்பது மற்றும் அதிக மைலேஜ் பெறுவதற்கான ஓட்டுநர் நுட்பங்கள் குறித்து யமஹா நிபுணர்கள் வாடிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
மேலும், பங்கேற்ற அனைத்து வாகனங்களுக்கும் இலவச வாஷ் மற்றும் விரிவான 10-பாயிண்ட் இன்ஸ்பெக்ஷன்  பரிசோதனை செய்யப்பட்டு, வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பிரத்யேக நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்