கோவை தெலுங்கு பாளையம் முதல் வேடப்பட்டி வரை உள்ள சாலைகளை அமைத்துக் கொடுத்தது தோழர் வி.எஸ் - பல் சமய நல்லுறவு இயக்கம் தலைவர் ஹாஜி ஜெ.முகமது ரஃபி.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தாமஸ் கிளப்பில் மறைந்த தோழர் வே. சுப்பிரமணியன் அவர்களுக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது . இதில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், இந்திய கலாச்சார நட்புறவு கழகம், பல்சமய நல்லுறவு இயக்கம், மத்திய மாநில அரசு பணியாளர்கள் சங்கங்கள், மாநில அரசு ஓய்வூதியர் சங்கம் மற்றும் இலக்கிய சமூக அமைப்புகள் கலந்து கொண்டு மறைந்த தோழர் வே. சுப்பிரமணியன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.இது குறித்து பேசிய பல் சமய நல்லுறவு இயக்கம் ரஃபிக் கூறுகையில்
தோழர் வி.எஸ் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஒரு உதவி என்று சொன்னால் உடனே வந்து உதவுவார் பல்வேறு ஏழை மக்களுக்காக நிறைய நன்மைகள் செய்துள்ளார். கோவை தெலுங்கு பாளையம் முதல் வேடப்பட்டி வரை உள்ள சாலைகளை அமைத்துக் கொடுத்தது தோழர் வி.எஸ். என்பதை என்றுமே மறக்க முடியாது. என்றார். பல் சமய நல்லுணர்வு இயக்கத்திற்கு எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ரேஷன் கார்டுகளை வாங்கிக் கொடுத்தவர் . மேலும் என்னை நல்ல நண்பர் நல்ல சமூக சிந்தனை உள்ளவர் என்று எல்லோரிடமும் என்னை பாராட்டியவர் . பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் மீட்டெடுத்தவர் என்று என்னை குறிப்பிடுவார் . அரசுத் துறையில் எந்த அதிகாரியாக இருந்தாலும் என்னுடைய தோழர் பல் சமய நல்லுறவு இயக்கம் ரஃபிக் உடனே செய்து கொடுங்கள் என்று எவ்வித வேலையாக இருந்தாலும் உடனே செய்து கொடுப்பார் தோழர் வி.எஸ். அவரது குடும்பத்திற்கு என்றென்றும் எனது மரியாதையும் வணக்கங்களும் சமர்ப்பிக்கிறேன் என்றார் இந்நிகழ்வில் தோழர் ப.பா.ரமணி (கலை இலக்கிய பெருமன்றம் - தலைவர், தோழர் ராதாகிருஷ்ணன் இஷ்கப் தலைவர், எழுத்தாளர் சூர்யகாந்தன், பேரூர் நாகராஜ் ஜனதா கட்சி, வழக்கறிஞர் கே. சுப்பிரமணியம், A .அபுதாகிர் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பல் சமய நல்லுறவு இயக்கம் , வழக்கறிஞர் இஸ்மாயில் பல் சமய நல்லுறவு இயக்கம் மாவட்ட தலைவர்,ராஜன் கோட்டியப்பன்,கா.சு. வேலாயுதன் எழுத்தாளர் என பலர் கலந்து கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்