அதிமுக முக்கிய நிர்வாகி விலகல்: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் வழக்கறிஞர் விணீத்


கோவை மாவட்ட அரசியலில் திடீர் திருப்பமாக, அதிமுகவின் முக்கிய இளைஞர் அணி நிர்வாகி ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.
கோவை மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர் வழக்கறிஞர் விணீத். இவர் நேற்று தனது கட்சிப் பதவியையும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் திடீரென ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், வழக்கறிஞர் விணீத் அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கோவையில் அதிமுகவின் வலுவான முகமாக அறியப்பட்ட நிர்வாகி ஒருவர் தவெகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விணீத் தரப்பில் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கோவையில் தவெகவின் வளர்ச்சிக்காகத் தீவிரமாகப் பணியாற்றப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்