​கோவையில் ‘மனித நேய ஜனநாயக நீதிக்கட்சி’ அறிமுக விழா.




கோவையில் ‘மனித நேய ஜனநாயக நீதிக்கட்சி’ என்ற புதிய அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று  போத்தனூரில் உள்ள மதினா ஹாலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
​கழகத் தொடக்கமும் தலைமையும் அப்துல் கபூர் (மக்கா பள்ளிவாசல் தலைவர்) மற்றும் ஜனநாயக வெற்றி கழக நிறுவனத் தலைவர் மாண்புமிகு A. ஒயிட் பாஷா ஆகியோர் முன்னிலையில் கட்சியின் தொடக்க விழா நிகழ்வுகள் துவங்கின.​இந்த விழாவிற்கு மனித நேய ஜனநாயக நீதிக்கட்சியின் நிறுவனரும் தலைவருமான கோவை இல்முதீன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் நூர் முகமது முன்னிலை வகித்து கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து உரையாற்றினார்.
​சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பு
​இந்த அறிமுக விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்:
​ ரமேஷ் – மாநில செயலாளர் (Congress - OPC WING)
​ காஜா கான் – முன்னாள் மாமன்ற உறுப்பினர்
​ஆதி இப்ராஹிம் – தமிழக வெற்றி கழகம் (மாவட்ட முதன்மை செயற்குழு உறுப்பினர்)
​திரு. முகமது ஹனீப் – MJK கோவை மாவட்ட செயலாளர்
​திரு. முகமது ரியாஸ் – தமிழக நியூஸ் ரிப்போர்ட், முதன்மை பத்திரிகையாளர்
​திரு. காஜா மைதீன் மக்கள் நீதி மய்யம், பல்லடம் பொறுப்பாளர்
​அபுதாஹிர் 
​முகமது இதிரீஸ் – முன்னாள் மாமன்ற உறுப்பினர் 
​இவர்களுடன் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி மற்றும் வர்த்தக அணி செயலாளர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வழிநடத்தினர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்