மக்களை ஒற்றுமைப்படுத்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.




சாதி, மதங்களைக் கடந்து மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதையும், இயக்கத்தின் உன்னத நோக்கங்களை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு, "பல்சமய நல்லுறவு இயக்கத்தின்" புதிய மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.​கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி (05.04.2026) அன்று நடைபெற்ற இயக்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவின்படி, இந்த புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக இயக்கத்தின் தலைவர் ஜே. முகமது ரஃபி (J. MOHMED RAFI) இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
​அதன்படி, மாநில இளைஞர் அணி தலைவராக கோவையைச் சேர்ந்த கோவை. முகமது தல்ஹா M அவர்களும், மாநில இளைஞர் துணைத் தலைவராக ஈரோட்டைச் சேர்ந்த சையது சஹாஹீன் S அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அர்னவ் சிங் கபூர் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளராகவும், கோவையைச் சேர்ந்த C K சஞ்சீவ் மாநில இளைஞர் அணி செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.​புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் அனைவரும் சமூக நல்லிணக்கத்திற்காகவும், இளைஞர்களிடையே மனிதநேயத்தை வளர்க்கும் பணிகளிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று இயக்கத்தின் தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது. புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும், இயக்கத்தின் உறுப்பினர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்