ஸ்ரீ நாராயண குரு தமிழக பேரமைப்பின் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
தமிழகத்தில் வாழும் ஸ்ரீநாராயணீயர்கள் எனும் ஈழவ, திய்யா சமுதாய மக்களின் கலாச்சாரம், கல்வி, ஆன்மீகம் மற்றும் வாழ்வுரிமைகளுக்காக செயல்பட்டு வரும் எங்களது அமைப்பாகிய ஸ்ரீ நாராயண குரு தமிழக பேரமைப்பின் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தேசத் தலைவர்கள், இதர அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் அதிகாரபூர்வமான கூட்டம் நடைபெற்றது.அமைப்பின் எதிர்கால செயல் திட்டங்கள், சமுதாய மக்களுக்கான நலத் திட்டங்கள், இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் மேம்பாடு குறித்த ஆலோசனைகள் மற்றும் செயல்திட்டங்கள், மத்திய அரசாங்த்திலிருந்து OBC சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள், ஏழை எளிய மக்களுக்கான பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் மேம்படுத்தல் குறித்த ஆலோசனைகள் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.இந்த முக்கிய செய்திகளை பொதுமக்களுக்கும் எங்களது சமதாய மக்களுக்கும், சமுதாய அமைப்புகளுக்கும் மாநில அளவில் பரவலாக சென்றடைய தங்களது மதிப்பு மிக்க செய்தி ஊடகங்கள் மூலம் செய்தியாக வெளியிட்டு ஒத்துழைக்குமாறும் அன்றைய தினம் தங்களது செய்தியாளர்கள் நேரில் வந்து இந்த நிகழ்ச்சியை செய்தியாக வெளியிட வேண்டுமெனும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்