பத்திரிகை செய்தி – பல்சமய நல்லுறவு இயக்கம்.
பள்ளி செல்லும் மாணவியர்களுக்கு மாதாவிடாய் காலங்களில் மூன்று நாட்கள் விடுப்பு வழங்கும் அறிவிப்பை வெளியிட்ட கேரளா அரசாங்கத்துக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் என அனைவருக்கும் இதன் பயனை விரிவுபடுத்த வேண்டுகோள் விடுக்கிறோம். மகளீர் சமூகத்தினர் வாழ்வியலில் மாதாவிடாய் நாட்களில் கடும் உடல் சோர்வையும், வலியையும் சந்திக்கின்றனர். இந்த நேரங்களில் அவர்களால் இயல்பான நிலையில் இருக்க முடிவதில்லை. இதன் நிலை அறிந்து உணர்ந்த கேரள அரசாங்கம், மாதாவிடாய் காலங்களில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியிருக்கின்றனர்.பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உடலியல் சார்ந்த தேவைகளை உணர்ந்து, அவர்களின் கல்விப் பயணத்திற்குத் தடையின்றி இந்த முற்போக்கான முடிவை எடுத்துள்ள கேரள முதலமைச்சர் மற்றும் அம்மாநில அரசாங்கத்துக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது. இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ள நிலையிலே, பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கேரள அரசிற்கு ஒரு அன்பான வேண்டுகோளையும் முன்வைக்கிறோம் . இந்தத் திட்டத்தின் நன்மைகள் முழுமையாகச் சென்றடைய, கல்லூரி மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்கள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் இந்த மாதவிடாய் கால விடுப்புப் பயனை விரிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.உடல் ரீதியான இக்கட்டான காலகட்டங்களில் பெண்களுக்கு வழங்கப்படும் இத்தகைய ஆதரவு, அவர்களின் கல்வி மற்றும் பணித்திறனை மேம்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த உன்னதமான முடிவை தமிழ்நாடு அரசாங்கமும், மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும் என்றும் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக வலியுறுத்துகிறோம்.
ஹாஜி. ஜெ. முகமது ரஃபி,தலைவர் – பல்சமய நல்லுறவு இயக்கம்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்