ஶ்ரீ தண்டுமாரியம்மன் திருக்கோவில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்



கோவை காந்தி பார்க் அடுத்துள்ள ராயப்பா புரம்..(முத்தண்ணன்குளம்) அருகில் அமர்ந்து அருள் ஆட்சி செய்யும் அருள்மிகு ஶ்ரீ தண்டுமாரியம்மன் திருக்கோவில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் அப்பகுதி பொதுமக்கள் பக்தர்கள் படை சூழ கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அம்மனை  தரிசித்து அருள் பெற்றனர்.கோவிலில் வீற்றிருக்கும் பரிவார தெய்வங்களான செல்வ விநாயகர்.. பாலமுருகன்.. துர்க்கையம்மன் நூதன பரிவார தெய்வங்களாக அமிர்தகடேஷ்வரர்....சொர்ண ஆகர்ஷனபைரவர்... நவக்கிரக தெய்வங்கள் ஆகிய தெய்வங்களுடன் நம் அன்னை தண்டு மாரியம்மனுக்கு குருவருள் திருவருளும் கூடிய நன்நாளில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதில் தவத்திரு..சாந்தலிங்க அடிகளார். தவத்திரு..இராமானந்த குமரகுருபர அடிகளார்.தவத்திரு... கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் அடிகளார்....ஹரிஹர சீனிவாச சுவாமிகள்.. செந்தில்குமார அடிகளார் சுவாமிகள்.. ஈசான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்...அகோர தேசியப் பரமாச்சாரியார் சுவாமிகள்... பாலமுருகன் அடிமை சுவாமிகள்...திருநீலகண்ட பாஸ்கர் சுவாமிகள்..... கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.மஹா  கும்பாபிஷேகம் பூஜைகளை குருவருள் திருவருள் துணை புரிய  சர்வ சக்தி சிவ Sri ஆனந்த் சாஸ்திரிகள். மற்றும் அவரது குழுவினர்கள் அனைவரும் சேர்ந்து கும்பாபிஷேகம் விழாவினை நடத்தினர்.கோவில் நிர்வாகிகள் p.. காமராஜ்... மஸ்ரூம் பாயின்ட் சாம்பமூர்த்தி.. சோடா ராஜா..ஜெகநாதன்..ஆனந்தன்.. சுந்தரமூர்த்தி...கிருஷ்ணகாந்தி....முருகானந்தம்...இலைகடை ஜெயபால்.. பொன்.சுப்பிரமணி...செல்வராஜ் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.பாச உள்ளம் சமூக நல மக்கள் அமைப்பு நிறுவனர் கோவை கோகுல் உடன் இருந்தார்.கோவில் நிர்வாகம் சார்பில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆன்றோர்கள் சான்றோர்கள் அரசியல் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்