உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்காவிட்டால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம்



உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்காவிட்டால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்  சம்பத்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 



இதுகுறித்து கோவையில்  இந்து மக்கள் கட்சி மாநில  பொறுப்பாளர் 
சூர்யா பேசுகையில்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் கடும் கண்டனத்தை  தெரிவிப்பதாகவும் சனாதனத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் பேசி வருவதாக குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக பேசி வருவதாகவும்,  இத்தகைய கருத்துகளால் இந்துக்களின் வாக்குகளை இழந்து வருவதாகவும் கூறினார்.உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சைக் கண்டித்து அவர் மன்னிப்பு கேட்காவிட்டால்  இந்து மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். மேலும் முதல்வர் விஜய் பொறுப்பேற்கும் போது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகத்தை கூறினார் எல்லா மதத்தினருக்கும் ஒரே நீதி ஒரே நியாயம் என்று தெரிவித்தார் இந்நிலையில் உதயநிதியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு முதல்வர் விஜய் எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை இத்தகைய பேச்சுக்கு சட்டப்பேரவையில் எல்லோரும் மௌனம்  காத்திருந்ததை  இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார். உதயநிதி ஸ்டாலின் இதுபோல் பேசுவது இரண்டாவது முறையாகும் இது போல் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் டெங்கு மலேரியா கொசுக்கள் போன்றது சனாதானம் இதை அழிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் . மேலும் மேலும் இந்துக்களின் மனங்கள் புண்படும்படி உதயநிதியின் பேச்சு தொடர்ந்தால் இந்து மக்கள் கட்சி மாநிலம்  தழுவிய ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்துவோம் என்றார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்