நஞ்சுண்டாபுரம் ஊராட்சி பள்ளி மாணவர்களுக்கு 20ம் ஆண்டாக நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை வழங்கிய VKV குரூப் ஆப் கம்பெனிஸ்!!
கோவை சோமையனூர் விகேவி (VKV) குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில், நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. நடப்பு ஆண்டுடன் இச்சேவை 20-வது ஆண்டாக தொடர்ந்து நீடிப்பது குறிப்பிடத்தக்கது.விகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சேர்மனும், நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவருமான விகேவி சுந்தரராஜ் அவர்கள், பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார். இறுதியாக சோமையனூரில் நடைபெற்ற விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்