அரசு பொருட்காட்சியில், முதியோர்கள், மாற்று திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள் என 200 நபர்களை அழைத்து வந்து அவர்களுடன் ஒரு நாள் வாழ்ந்த தமிழ்நாடு பொருட்காட்சி வியாபாரிகள் நலச்சங்கத்தினர்!
கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில், முதியோர்கள், மாற்று திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள் என 200 நபர்களை அழைத்து வந்து அவர்களுடன் ஒரு நாள் வாழ்ந்த தமிழ்நாடு பொருட்காட்சி வியாபாரிகள் நலச்சங்கத்தினர்.
கோவையில் கோடைகாலத்தில் பொதுமக்களின் மிகபெரிய பொழுதுபோக்கு என்ற நம்பிக்கை பெற்ற அரசு பொருட்காட்சி
கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில், ஜூன் 9ம் தேதி துவங்கியது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக நடத்த படும் இநுத பொருட்காட்சியை கான ஆண்டு தோறும் லட்சகணக்கான பொதுமக்கள் வந்து செல்வதுண்டு இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் படி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து அரசு பொருட்காட்சிக்கு, மாற்று திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து அவர்களையும் ஒரு குழந்தையாக பாவித்து மகிழ்ச்சியடைய செய்யும் செயல்களை, தமிழ்நாடு பொருட்காட்சி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஸ்வதர்மா அறக்கட்டளை, ஹெல்பிங் ஹார்ட்ஸ் அறக்கட்டளையில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட, முதியோர்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள், மனநலம் குன்றியவர்களை அழைத்து வந்து, அவர்களின் கனவுகளையும் நினைவாக்கினர். நுழைவுத் கட்டணம் முதல் அவர்களின், விளையாட்டு கட்டணம், பொருட்காட்சி அரங்குகளை பார்வையிடும் கட்டணம், திண்பண்டங்களுடன், இரவு உணவு வரை அவர்களுக்கு செய்து அவர்களின் கனவை நினைவாக்கி உள்ளனர் தமிழ்நாடு பொருட்காட்சி வியாபாரிகள் நலச்சங்கத்தினர். அவர்கள்
ராட்டினத்தில் சுற்றியபடியும், ஸ்னோ வேர்ல்டில் குளிரில் நடுங்கியபடியும், உணவு கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை கண்டு ரசித்தும் இன்றைய நாளை மகிழ்ச்சியாக அவர்கள் களித்ததுடன் இதனை ஏற்பாடு செய்து தந்த அனைவருக்கும் நன்றிகளையும் கூறினர்
மேலும் இதனை நினைவாக்க உறுதுணையாக இருந்த, செய்தி மக்கள் தொடர்பு துறை, கோவை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு பொருட்காட்சி வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பொருட்காட்சி வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகளான, ஆர்.எம்.ரபிக், ஏர்டெல் அபு, அபு, ஸ்னோ வேர்ல்ட் இஸ்மாயில், அம்யூஸ்மென்ட் மோகன், டெல்லி அப்பளம் பாபு, ஜக்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்