ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 வெண்கல பதக்கம் வென்ற கோவை ஆசிரமம் பள்ளி வீரர் வீராங்கனை!!

ஆசிய மவுண்டன் பைக்  சாம்பியன்ஷிப் 2026 ம் ஆண்டுக்கான போட்டிகள், ஜூன் 21ம் தேதி முதல் ஜூன் 28ம் தேதி  வரை உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள, தாஷ்கண்ட்  நகரில் நடைபெறுகிறது.இதில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்ற கோவை ஆசிரமம் பள்ளி வீரர் வீராங்கனை.

ஆசிய மவுண்டன் பைக்  சாம்பியன்ஷிப் 2026 ம் ஆண்டுக்கான போட்டிகள், ஜூன் 21ம் தேதி முதல் ஜூன் 28ம் தேதி  வரை உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள, தாஷ்கண்ட்  நகரில் நடைபெறுகின்றது.
ஏசியன் சாம்பியன் 
ஷிப் எம்டிபி 2026ம் ஆண்டுக்கான போட்டிகளில் கலந்து கொள்ள,  இந்தியா உட்பட 21 நாடுகளில் இருந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில், நேற்று நடைபெற்ற
டீம் ரிலே போட்டியில், இந்தியா சார்பில் போட்டியிட்டு வெண்கல பதக்கம் வென்றது தமிழ் நாடு அணி. குறிப்பாக கோவை ஆசிரமம் பள்ளி வீரர்களான  ஹாசினி மற்றும் ப்ரனேஸ் ஆகிய இருவர் பங்கு பெற்று, வெண்கல பதக்கத்தை  வென்றுள்ளனர். கூடுதல் சிறப்பம்சமாக 
இது வரை ஹாசினி, 15 தேசிய மெடல்களும், 2 சர்வதேச மெடல்களும் பெற்று உள்ளார். ப்ரனேஸ், 9 தேசிய மெடல்களும், 4 சர்வதேச மெடல்களும்  பெற்றுள்ளனர். 
இவர்கள் இருவரும் கோவை மாவட்டம், கோவை புதூர் பகுதியில் உள்ள, ஆசிரமம் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெறும் இந்த போட்டிகளில் பங்கேற்க்க பல்வேறு உதவிகளை தமிழக  அரசின் எஸ்டிஏடி பிரிவின் மூலமாக வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், செய்து கொடுத்துள்ளது. இத்தகைய செயலே அவர்களின் வெகற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளது. வெண்கல பதக்கம் வென்ற,வீரர், மற்றும் வீராங்கனைக்கு தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன், மற்றும்  கோவை சைக்கிளிங் அசோசியேசன், மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்