கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியில் பிரவர்த்தனா– 2026 தொடக்க விழா!
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் எஸ்பி டாக்டர் ஏ. கலியமூர்த்தி, "மாணவர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, கல்வி, ஒழுக்கம், ஆரோக்கியத்துடன் எதிர்கால சாதனையாளர்களாகத் திகழ வேண்டும்" என அறிவுறுத்தினார்.
விழாவில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் சாதனை படைத்தவர்கள் மற்றும் தேசிய விளையாட்டு வீரர்கள் என 204 மாணவர்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நிறைவாக மாணவி எம்.வி. சாத்விகா நன்றியுரை கூறினார். இதில் முதலாமாண்டு மாணவர்கள், பெற்றோர்கள் என 1200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்