கோவையில்'பிக்கி புளோ பஜார் 2026' கண்காட்சி இன்று தொடக்கம்!

இந்திய தொழில் வர்த்தக சபை (FICCI) மகளிர் அமைப்பான பிக்கி புளோ கோவை கிளையின் சார்பில்,பெண்தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் 'புளோ பஜார் 2026' கண்காட்சி தொடங்கியது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் ஜூன் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் இக்கண்காட்சி நடைபெறுகிறது.
11-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த முதன்மை நிகழ்வில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுய உதவிக்குழுக்கள், அடிமட்டத் தொழில் நிறுவனங்கள் என 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமையிலான தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் நோக்கில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்