கோவை உப்பார வீதிஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 39 ஆம் ஆண்டு மகா உற்சவ திருவிழா
கோவை உப்பார வீதி பகுதியில் அருள் ஆட்சி செய்து வரும் அருள் மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 39 ஆம் ஆண்டு மகா உற்சவ திருவிழா மிக பிரம்மாண்டமாக கோலாகலமாகவும் நடைபெற்றது.
திருவிழாவானது விழாத்தலைவர் s.பிரபு மற்றும் முன்னிலையிலும் விஷ்ணுபிரியா எண்டர் பிரைசஸ் அருள்மிகு ஶ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறக்காவலர் d.பரமசிவம்.....கிரிராஜ்..ரத்தினம்...துரை..பாலன்...செந்தில்...மணி...கார்த்தி...ஜெயகாந்த்..ராகுல்..சிவா..மற்றும் பாச உள்ளம் சமூக நல மக்கள் அமைப்பு நிறுவனர் கோவை கோகுல் ஆகியோர் ஏற்பாட்டின் பேரிலும் மிக விமரிசையாக நடைபெற்றது.கொடியேற்றத்துடன் துவங்கிய கோவில் திருவிழா நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் பக்தர்களுக்கு அன்னதானம் முளைப்பாரி எடுத்தல் , அம்மனை அழைத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மேலும் அம்மன் ஆற்றில் இறங்கும் நிகழ்வானது கோவிலிலிருந்து கரகம் எடுத்து ஜமாப் இசை முழங்க அம்மன் மற்றும் கருப்பண்ண சுவாமி நடனத்துடன் ஊர்வலமாக சென்றது அப்பகுமக்களை நெகிழ்ச்சியடைய செய்த்து... மேலும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் அம்மனை வரவேற்கும் வகையில் பக்தி பரவசத்தில் உற்சாக நடனமாடினர்.முத்துமாரியம்மனை தரிசித்து அருள்பெற்ற அனைத்து பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களுக்கு கோவில் விழா கமிட்டியின் சார்பாக பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.முத்துமாரியம்மன் கோவில் மஹா உற்சவ திருவிழாவிற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் கோவில் விழா கமிட்டி தலைவர் பிரபு நன்றி தெரிவித்தார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்