7வயது சிறுவனுக்கு உயிர் காக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை ராயல் கேர் மருத்துவமனை சாதனை!!
ராயல் கேர் மருத்துவமனை, கடுமையான இதய செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த 7 வயது சிறுவனுக்கு மிகவும் அரிய மற்றும் சிக்கலான இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, அவருக்கு புதிய வாழ்க்கையை வழங்கியுள்ளது.இதய தசைகள் பலவீனமடைந்து இதயத்தின் செயல்திறன் குறையும் டைலேட்டட் கார்டியோமயோபதி (Dilated Cardiomyopathy - DCM) எனும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த சிறுவன். இந்த நோய் முற்றிய நிலைக்கு சென்ற பின்னரே அது குறித்து அறிந்ததாக அவரது தாயார் தெரிவித்தார். வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனளிக்காத நிலையில், இரண்டாவது கருத்துக்காக அவர் ராயல் கேர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.ராயல் கேர் மருத்துவமனையின் இதய மற்றும் இரத்த நாள அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஜி.பிரதீப் (MBBS, DrNB Cardiothoracic and Vascular Surgery) , செயலிழப்பு நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆரம்பத்தில் தீவிர மருத்துவ சிகிச்சை மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, சிறுநீரக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதுடன் பல்வேறு உறுப்புகளிலும் சிக்கல்கள் உருவாகின.உயிரைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக, அவருக்கு ECMO (Extracorporeal Membrane Oxygenation) எனப்படும் மேம்பட்ட இதயம் - நுரையீரல் ஆதரவு கருவி பொருத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில், அவருக்கு வலது நுரையீரலில் கடுமையான தொற்று மற்றும் நுரையீரல் சுருங்கும் நிலையும் ஏற்பட்டதால் சிகிச்சை மேலும் சவாலாக மாறியது.
சிறுவனின் உடல் எடை மற்றும் உடல் அளவிற்கு ஏற்ற வகையில் இதயத்தை தானமாக தரக்கூடிய நிலையில் உள்ளவரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. நீண்டகால காத்திருப்பிற்குப் பிறகு, மூளைச்சாவு அடைந்த ஒரு நபரிடமிருந்து இதயம் கிடைத்தது. அவரது இதயத்தை குழந்தைக்கு பொருத்தும் கடினமான சவாலை மருத்துவக் குழு ற்றுக்கொண்டது.
"சிறுவனின் நிலை மிகவும் ஆபத்தானதாக இருந்தது. இதய மாற்று அறுவைச் சிகிச்சை இல்லையெனில் உயிர் பிழைப்பது மிகவும் சாத்தியமற்றதாக இரு தது. இதயத்தின் அளவு வேறுபாடு, நீண்டகால ECMO ஆதரவு மற்றும் தானமாக கிடைத்த இதயத்தின் குறைந்த செயல்திறன் போன்ற பல தொழில்நுட்ப சவால்கள் இருந்தன. இருப்பினும், எங்கள் பல்துறை மருத்துவக் குழு அவற்றை வெற்றிகரமாக சமாளித்தது." என்று டாக்டர்.பிரதீப் தெரிவித்தார்.அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் சிறுவனுக்கு நீண்டகால ECM ஆதரவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு கவனிப்பும் வழங்கப்பட்டது. மாற்று இதயத்திற்கு போதுமான இடவசதி கிடைக்க அவரது மார்பு தற்காலிகமாக திறந்த நிலையிலேயே வைக்கப்பட்டது. பின்னர் நுரையீரல் தொற்றுக்கு கூடுதல் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அடுத்த சில வாரங்களில் அவரது இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகள் படிப்படியாக மேம்பட்டு உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.தற்போது இச்சிறுவன் நலமுடன் குணமடைந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்த வெற்றி, குழந்தைகளுக்கான மேம்பட்ட இதய சிகிச்சை துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்த சாதனையின் வெற்றிக்கு இதய அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் தீவிர சிகிச்சை, மயக்கவியல், நுரையீரல் மருத்துவம், உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பு, செவிலியர் சேவை மற்றும் மறுவாழ்வு மருத்துவம் உள்ளிட்ட பல்துறை மருத்துவக் குழுக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பே காரணம் என ராயல் கேர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்