ஜுவல் ஒன் நகை நகை கடையில் நடத்தப்பட்ட நவநாகரிக அலங்கார அணிவகுப்பு
கோவை காந்திபுரம் பகுதியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஜுவல் ஒன் நகை நகை கடையில் நடத்தப்பட்ட நவநாகரிக அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அழகிகளின் ஒய்யார நடையை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
தங்க நகை உற்பத்தி மற்றும் விற்பனையில் பிரசித்தி பெற்ற நிறுவனமான எமரால்ட் குழுமத்தின் சில்லறை விற்பனை பிரிவான ஜுவல் ஒன் நிறுவனத்தின் 16 வது கிளையாக கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் ஐந்து தளங்களுடன் சுமார் 22500 சதுர அடி பரப்பளவில் புதிதாக பிரம்மாண்ட நகை கடை கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.திறப்பு விழாவை ஒட்டி தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட புதிய வகை நகைகளை அணிந்த அழகிகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் சின்னத்திரை நடிகைகள் மற்றும் பிரபல மாடல் அழகிகள் பலர் பங்கேற்றனர். அவர்கள் அந்நிறுவனத்தின் தயாரிப்பு நகைகளை கழுத்தில் அணிந்தபடி நகைக்கடை வளாகத்தில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். தங்க நகை விலை உயர்வை கருத்தில் கொண்டு குறைந்த எடையில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் பல்வேறு வகையிலான தரமான நகைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் 5 கிராம் முதல் 250 கிராம் எடை வரையிலான நெக்லஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலான அனைத்து வடிவமைப்புகளும் உள்ளது என்றும் அந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்