பேரூர் பகுதியில்தற்காப்பு கலை பயிற்சி முகாம்,தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்ற தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்களுக்கு பாராட்டு விழா.



கோவை பேரூர் பகுதியில் நடைபெற்ற தற்காப்பு கலை பயிற்சி முகாம், மற்றும் பல்வேறு தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்ற தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்களுக்கு பாராட்டு விழா.

கோவை பேரூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி உடைய ஒரு நாள் பயிற்சி முகாம் மற்றும் தற்காப்புக் கலையில்  பல்வேறு தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவானது  அகாடமி உடைய நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சிளர் சென்சாய் சதீஸ், மற்றும் துணைத் தலைவர் சேகர், மற்றும் செயலாளர் சபரிஸ், துணைச் செயலாளர் பால மணிகண்டன்  ஆகியோர் ஏற்பாடு செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்,மேற்கண்ட நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பேரூர் பேரூராட்சி 12 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் திரு பேரூர். மயில்,  தமிழக வெற்றிக் கழகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்