கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை மனு.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை மனு.
கோவை கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் குருஸ் முத்து பிரின்ஸ் தலைமையில் இந்த மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் கவிஞர் குரு நாகலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் A.பாலகிருஷ்ணன், மாநில இணைப் பொதுச் செயலாளர் கன்மலை முருகேசன், மாநில அமைப்புச் செயலாளர் C.V.அழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்த மனுவில், கடந்த ஆட்சியின் போது தொழிலாளர் நல வாரியத்தில் கொண்டு வரப்பட்ட SOP-ல் (Standard Operating Procedure) குறிப்பிடப்பட்டுள்ள சாராம்சங்களை கோவை மாவட்டத்தில் உடனடியாக அமல்படுத்தி, தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கூட்டமைப்பின் கோவை மாவட்டச் செயலாளர் ஏ.கே.ஆர்.வெங்கடேசன், பொருளாளர் ஆர்.பரத்ராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் J.முத்துலட்சுமி, தேவபாலன், G.சித்ரா, J.எலிசபெத், பர்வேஷ், சிரோன் மேரி, N.சிவக்குமார், சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறையின் கோவை மாவட்ட இணை ஆணையர் சாந்தி மற்றும் உதவி ஆணையர் கண்ணகி ஆகியோரையும் நேரில் சந்தித்து கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
இது குறித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் குருஸ் முத்து பிரின்ஸ் கூறுகையில்... எங்கள் வாரியத்தில் முக்கிய குறிக்கோள் வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்குவது ஆகும். ஆனால் கோவை மாவட்டத்தை பொருத்தவரை கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்கு ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. இது போன்ற பல்வேறு நலன்களும் கட்டுமான தொழிலாளர்களுக்கு உள்ளது கடந்த ஆட்சியில் எங்களது நல வாரிய தலைவர் பொன் குமார் அவர்களின் முயற்சியில் எளிதாக கிடைக்கப்பட்ட பலன்கள் தொழிலாளர்களுக்கு தற்போது கிடைப்பதில்லை. எனவே நடைமுறையில் உள்ள திட்டங்களும் கிடைப்பதில் தாமதம் ஆகி வருகிறது. இதனை விரைந்து அரசு நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்