அப்துல் கலாம் இரத்ததான இயக்கம் சார்பாக, அமைப்பின் பெயர் பலகைக்கு மாலை அணிவித்து மரியாதை



கோவை புலியகுளம் பகுதியில், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இரத்ததான இயக்கம் சார்பாக, அமைப்பின் பெயர் பலகைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குறுதி கொடையாளர்கள். இன்றைய இளைஞர்கள் இரத்ததானம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை புலியகுளம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், இதத்ததானத்தை முன்னிருத்தி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இரத்ததான இயக்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அவசர தேவைகளுக்கான இரத்த தானங்கள், இரத்த தானம் குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் இன்று ஜூன் 14ம் தேதியான இன்று உலக குறுதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, அமைப்பின் பெயர் பலகைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இரத்த தான இயக்கத்தை உருவாக்கி, 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி வரும்  கலைவாணன் கூறியதாவது.. 
உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு, ஒரு நொடித் துணிவு என்பது ஒரு உயிரின்  வாழ்க்கை, ​நம் உடலில் ஓடும்  இரத்தம் வெறும் திரவமல்ல, அது மற்றொருவருக்குக் கிடைக்கும் மறுவாழ்வு இதனை அனைவரும் தெரிந்து கொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டும் என்றார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ஆம் தேதி, உலக இரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது, கைமாறு கருதாமல், தன் இரத்தத்தைக் கொடுத்து பல உயிர்களைக் காக்கும் உன்னதக் கொடையாளர்களைப் போற்றும் நாள் இது. இரத்தத்திற்குப் மாற்றாக உலகில் எந்த ஒரு தொழிற்சாலையிலும் செயற்கை இரத்தத்தைத் தயாரிக்க முடியாது  மனித இரத்தத்திற்கு மனித இரத்தம் மட்டுமே மாற்று என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 
இரத்த தானம் செய்வது வாங்குபவருக்கு மட்டுமல்ல, கொடுப்பவருக்கும் நல்லது, இது உடலில் புதிய இரத்த அணுக்கள் உருவாக்குவதுடன், மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்றார். எங்களது அமைப்பு சார்பாக இதுவரையிலும் சுமார் 1000 யூனிட் இர்த்தங்கள் தானமாக வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இரத்த தான இயக்க நிர்வாகிகளான ராஜேஷ், வழக்கறிஞர் சீனிவாசன், ராஜ் தீபன், விஜய், விஷ்ணு, சூர்யா, ஸ்ரீ ராம், சுனில், சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்