முதல்வர் விஜயின் பிறந்தநாளை அன்னதானம் வழங்கி கொண்டாடி பூசாரிபாளையம் ரசிகர்கள்
தமிழக வெற்றிக்கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் இணைந்து வரும் சூழலில், எவ்வித அரசியல் எதிர்பார்ப்பும் இன்றி 20 ஆண்டுகளாக விஜயின் ரசிகர்களாகவே இருந்து கோவையை சேர்ந்த இளைஞர்கள், முதல்வர் விஜயின் பிறந்தநாளை அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
பனையூரில் கட்சி அலுவலக கேட்டை உடைத்துக்கொண்டு மாற்று கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். ஆனால்
கோவை பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் விஜயின் ரசிகர்களாக இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். விஜய் தமிழக வெற்றிக்கழகத்தை நிறுவி, தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜயாக பொறுப்பேற்ற பிறகும், அவர்கள் தங்களது ரசிகர் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அரசியல் பதவி , கட்சி பொறுப்பு என எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், முதக்வர் ஜோசப் விஜய் நீண்ட ஆயுளுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் நலத்திட்ட உதவிகளையும் அன்னதான நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை பூசாரிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கினர்.இதில் ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்