ஏழை மாணவியின் உயர்கல்விக்காக சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சூலூர் வடக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வழங்கல்!
கோவை புறநகர் கிழக்கு மாவட்டம், சூலூர் வடக்கு ஒன்றியம், சாமலாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (கூலி விசைத்தறி நெசவாளி). இவரது மகள் பிரியதர்ஷினி தனது உயர்கல்வியைத் தொடர பொருளாதார வசதியின்றி சிரமப்பட்டு வந்தார்.
மாணவியின் உயர்கல்விக்கு நிதியுதவி செய்யுமாறு, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.NM.சுகுமார் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் விதமாக,
ஜூன் 22 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக
சூலூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்
அதன்படி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.எம்.சுகுமார் அவர்களின் தலைமையில், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அஸ்வின் அவர்களின் ஏற்பாட்டில் மாணவி பிரியதர்ஷினியின் உயர்கல்வி பயில உதவித்தொகையாக ₹60,000 (அறுபதாயிரம் ரூபாய்) அவரிடம் நேரடியாக வழங்கப்பட்டு, கோரிக்கை மிகச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்:
திரு. அஸ்வின் – சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
திரு. பிரசாந்த் – ஒன்றிய இணைச்செயலாளர்
திரு. கத்தி ராஜா (எ) மகாலிங்கம் – ஒன்றிய பொருளாளர்
மற்றும் கார்த்தி, ஜெயம் அஸ்வின், ஸ்டெல்லா,
அரசூர் நவின், சிவக்குமார், சிவரஞ்சனி, நவின்,மைக்கேல்ராஜ்,
பூபால்,மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயலாளர் முருகேசன் மற்றும் சரவணன் பாலு சூலூர் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
ஏழை நெசவாளர் குடும்பத்து மாணவியின் உயர்கல்விக் கனவை நனவாக்க, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து துரிதமாக உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்த சூலூர் வடக்கு ஒன்றிய தவெக நிர்வாகிகளுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் மாணவியின் குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்