கோவையில் கார் வாங்கினால் தங்கம் கொடுக்கும் ஸ்பெஷல் ஆபர்!!


அம்பாள் ஆட்டோஸ் நிறுவனத்தில் Maruti Suzuki Victoris கார் வாங்கினால் ஒரு பவுன் தங்க நகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது.Maruti Suzuki நிறுவனத்தின் எஸ்யூவி காரான “Victoris” முதன்முறையாக 2025ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த கார், பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா மாடல்களுக்கு இடையில் அமைந்த பிரீமியம் எஸ்யூவி ஆகும். இளம் தலைமுறையை குறிவைத்து, நவீன டெக்னாலஜி, ADAS பாதுகாப்பு வசதி, ஹைபிரிட் மற்றும் CNG உள்ளிட்ட பல்வேறு பவர்டிரெயின் தேர்வுகளுடன் Victoris அறிமுகமானது.
இதனிடையே, கோவையில் செயல்பட்டு வரும் அம்பாள் ஆட்டோஸ் நிறுவனத்தில், 2025 தயாரிப்பான Victoris கார்களுக்கு மாருதி நிறுவனம் வழங்கும் ஆஃபர்களுடன் கூடுதலாக ஒரு பவுன் தங்க நகை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரூ.25,000 முன் பணத்தில் இந்த காரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அம்பாள் ஆட்டோஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இத்துடன் FIFA கால்பந்து தொடர் நடைபெறுவதை முன்னிட்டு கார் குறித்த Enquiry செய்ய வருபவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அம்பாள் ஆட்டோஸ் பொது மேலாளர் ராஜேஷ் ஜெயராமன் கூறுகையில், “Maruti Suzuki Victoris மாடல் கார்களுக்கு எங்கள் ஷோரூமில் தற்போது சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே உள்ள சலுகைகளுடன், ஒரு பவுன் தங்க நகை வழங்கும் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். தற்போது சுமார் 10 கார்கள் மட்டுமே இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் விரைவில் அம்பாள் ஷோரூமை அணுகலாம்.மேலும், FIFA கால்பந்து தொடரை முன்னிட்டு, காரை பார்வையிட வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். மாருதி சுசுகி வாகனங்களின் விலை ஜூன் மாதம் முதல் உயர வாய்ப்பு உள்ளதால், வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்