பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவியர் அறிமுக நிகழ்ச்சி.


பெண்கள் கல்வி மற்றும் அதிகாரமளிப்பில் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கும் பி.எஸ்.ஜி.ஆர் . கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ( KCW ) , 2026-27 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த இளநிலை மாணவியர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியை இன்று நடத்தியது.புதிய மாணவியர்களின் கல்லூரி வாழ்க்கையின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி , உற்சாகம் , நம்பிக்கை மற்றும் புதிய இலக்குகளுடன் மாணவியர்களை வரவேற்றது . முதல் ஆண்டு மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அன்புடன் வரவேற்கும் வகையில் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர் . நந்தினி வரவேற்புரையாற்றி புதிய மாணவியர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கல்விசார் சிறப்பும் முழுமையான ஆளுமை வளர்ச்சியும் கொண்ட கல்லூரியின் பாரம்பரியத்தை எடுத்துரைத்தார் கல்லூரி செயலாளர் முனைவர் என். யசோதாதேவி , புதிய மாணவியர்களை வரவேற்று அவர்களின் சுல்விப் பயணத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.கல்லூரி முதல்வர்
பி.பீ. ஹாரதி கல்லூரியின் வரலாறு முன்னேற்றங்கள் மற்றும் மாணவியர் மையப்படுத்தப்பட்ட பல்வேறு முயற்சிகள் குறித்து விரிவாக அறிமுகப்படுத்தினார்.காலை அமர்வில் , மேற்கு மண்டல காவல்துறை தலைமை ஆய்வாளர்  ஆர் .வி .ரம்யா பாரதி , ஐ.பி.எஸ் .  தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார் . மாணவியர்கள் தன்னம்பிக்கை , நேர்மை , மன உறுதி மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் . 
சென்னை EC Group International நிறுவனத்தின் மனிதவளத் துறை நிர்வாக துணைத் தலைவர்  டேனியல் ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , வேலைவாய்ப்புத் திறன்கள் , தொழில்முறை திறன்கள் மற்றும் நிறுவன உலகின் தற்போதைய எதிர்பார்ப்புகள் குறித்து பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்தார்.தொடர்ந்து, இந்திய வாலிபால் விராங்கனை திருமதி ஷீபா சுரேஷ் சிறப்புரையாற்றி, விளையாட்டுத் துறையில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து , விடாமுயற்சி , மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மையின் அவசியத்தை குழுப்பணி வலியுறுத்தினார்.
மேலும் OS I - GAUGE அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரவின் நாயர் மற்றும் இணை இயக்குநர்  கிருஷ்ணராஜ் ஆகியோர் கல்லூரியின் கல்வித் தரம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பைப் பாராட்டி , சிறப்பான அங்கீகாரத்தை வழங்கினர்.இதனைத் தொடர்ந்து 
பிற்பகல் அமர்வில் பிரிக்கால் நிறுவனத்தின் தலைவர்  மற்றும் சிறுத்துளி அமைப்பின் இணை நிறுவனர் வனிதா மோகன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவியர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையாற்றினார் . 
தனது உரையில், தலைமைத்துவ பண்புகள் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் சமூக சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் . 
இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் Startup India ( DPIIT ) அமைப்பின் தலைவர்  மமதா வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , புதுமை , தொழில்முனைவு மற்றும் தொடக்க நிறுவனங்களின் வாய்ப்புகளை மாணவியர்கள் ஆராய வேண்டும் என்று ஊக்கமளித்தார்..
தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தித் தொழில்நுட்ப சிறப்பு மையத்தின் ( TANCAM ) தொழில்நுட்ப துணைத் தலைவர் ராஜா சுப்பிரமணியன் சிறப்புரையாற்றி தொழில்நுட்ப வளர்ச்சி , தொழில் துறைக்கான தயார்நிலை மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் . நிகழ்ச்சியின் நிறைவாக , கல்லூரியின் உள்தர உறுதிப்பாட்டு மைய ( IQAC ) ஒருங்கிணைப்பாளர்  ஜெ .பாலவிஜயலட்சுமி நன்றியுரையாற்றினார்.புதிய மாணவியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன . இந்த மாணவர் அறிமுக நிகழ்ச்சி , கல்லூரியின் பண்புகள் , வாய்ப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளை புதிய மாணவியர்களுக்கு அறிமுகப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்